Don't Miss!
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
குஷ்பு இட்லியை சாப்பிட்டதும் இல்ல.. பார்த்ததும் இல்ல..குஷ்பு கலகல பேட்டி!
சென்னை : தமிழில் முன்னணி நடிகையாகவும், தயாரிப்பாளராகவும், அரசியல் பிரபலமாகவும் இருந்து வரும் நடிகை குஷ்பு இதுவரை தான் குஷ்பு இட்லியை பார்த்தது கூட இல்லை என கூறியுள்ளார்.
ரஜினிகாந்த், பிரபு, கமல்ஹாசன், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ஹீரோக்களுக்கு இணையாக தனி ரசிகர் கூட்டத்தை கொண்டு கோலிவுட்டை ஆட்டிப் படைத்த நடிகை குஷ்பு இப்பொழுது தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.
திரைப்படங்களின் வாயிலாக அனைவரையும் ரசிக்க வைத்த குஷ்புவின் பெயரில் பல ஆண்டுகளாக இட்லி பிரபலமாகி வரும் நிலையில் சமீபத்தில் இவர் கொடுத்த பேட்டி ஒன்றில் தான் இதுவரை குஷ்பு இட்லியை பார்த்ததும் கிடையாது சாப்பிட்டது கூட இல்லை என கலகலப்பாக கூறியுள்ள வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

கதாநாயகியாக கலக்கி
தமிழ் திரைப்படத்துறையில் ஹீரோயின்கள் பலருக்கும் இல்லாத பெருமை நடிகை குஷ்புவுக்கு இன்று வரை இருந்து வருகிறது. தமிழ், ஹிந்தி, மலையாளம் கன்னடம் என பல மொழிகளில் கதாநாயகியாக கலக்கி வந்த நடிகை குஷ்பு அனைவரும் விரும்பும் மிகச் சிறந்த நடிகையாவார்.

கொள்ளைப் பிரியத்துடன்
தமிழில் வெளியான சின்னத்தம்பி, வருஷம் 16, தர்மத்தின் தலைவன், மைக்கல் மதன காமராஜன், பாண்டித்துரை, நடிகன் என இவரின் எண்ணற்ற திரைப்படங்கள் வசூலில் சக்கைப்போடு போட்டது மட்டுமல்லாமல் நடிகை என்பதையும் தாண்டி ரசிகர்கள் இவர் மீது கொள்ளை பிரியத்துடன் இருந்து வந்தனர்.

அரசியலிலும் மிகப்பிரபலமாக
இவ்வாறு ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட நடிகையான குஷ்பூ இப்பொழுது சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், சில திரைப்படங்களை தயாரித்து, தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் அதே சமயம் அரசியலிலும் மிகப் பிரபலமாக உள்ளார்.

பஞ்சு போல மிருதுவாக
இந்நிலையில் குஷ்புவின் பெயரில் பல ஆண்டுகளாக இட்லி பிரபலமாகி வரும் நிலையில் பலரும் பல கடைகளில் "குஷ்பு இட்லி" என்ற பெயரில் இட்லியை விற்று வருகின்றனர். பஞ்சு போல மிருதுவாக இட்லி இருப்பதால் அதற்கு குஷ்பு இட்லி என பெயரிடப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் நடிகை குஷ்பு இதுவரை தனது பெயரில் இருக்கும் இட்லியை பார்த்ததோ சுவைத்ததோ இல்லை என கூறியுள்ளார்.

அனுப்பி வைத்ததாக
சமீபத்தில் குஷ்பு கொடுத்த கலகலப்பான பேட்டி ஒன்றில் தொகுப்பாளர் குஷ்பு இட்லி ஒன்று இருக்கிறது அதை சாப்பிட்டுள்ளீர்களா என கேட்டதற்கு, நான் இது வரைக்கு குஷ்பு இட்லியை சாப்பிட்டதும் கிடையாது, பார்த்ததும் கிடையாது . ஆனால் என்னுடைய நண்பர்கள் கோவாவிற்கு சுற்றுலா சென்றபோது அங்கு பிரபலமான ஹோட்டல் ஒன்றில் குஷ்பு இட்லி என்ற பெயரில் இட்லி வைக்கப்பட்டிருந்ததாகவும் அதை நண்பர்கள் வீடியோக்களாகவும் புகைப்படங்களாகவும் தனக்கு அனுப்பி வைத்ததாக கூறிய குஷ்பு சாதாரண மக்கள் கூட குஷ்பு இட்லியை சுவைத்து பார்த்துள்ள நிலையில் தனது பெயரிலேயே இருக்கும் குஷ்பு இட்லியை இதுவரை பார்த்ததும் கிடையாது சுவைத்ததும் கிடையாது என கலகலப்பாக பேசியுள்ள அந்த வீடியோ இப்பொழுது இணையதளத்தில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.