»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil


அஜீத்தின் படத்திலிருந்து கிரண் திடீரென நீக்கப்பட்டுள்ளார்.

சரண் இயக்கும் அஜீத்தின் அட்டகாசம் படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக கிரண் சேர்க்கப்பட்டார். ஹீரோயினாக பூஜா புக் செய்யப்பட்ட நிலையில் சரணையும் அஜீத்தையும் தனியே சந்தித்துப் பேசி செகண்ட் ஹீரோயின் ரோலை வாங்கினார் கிரண்.

ஆனால், இப்போது அந்தப் படத்திலிருந்து காரணமே சொல்லாமல் நீக்கப்பட்டுள்ளார் கிரண்.

தமிழில் இந்தப் படத்தை வைத்து எப்படியாவது மீண்டும் உள்ளே வந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் பெரும் அடி விழுந்துவிட்டது.

அதே போல எஸ்.ஜே. சூர்யா நடித்து-இயக்கிய நியூ படத்தின் தெலுங்குப் பதிப்பான ஞானியில் படு கவர்ச்சியாக நடித்திருந்தார் கிரண்.

தெலுங்கில் கவர்ச்சி மார்க்கெட்டைப் பிடித்துவிடும் முயற்சியில் இறங்கிய கிரண், தமிழ் பதிப்பைவிட ஞானியில் அதிக தூக்கலான கவர்ச்சியை சேர்க்கும்படி வலியுறுத்த, புகுந்து விளையாடியிருந்தார் சூர்யா. ஆனால், படம் படு பிளாப்.

இதனால் சோகத்தில் இருந்த கிரணுக்கு இப்போது தமிழில் கிடைத்த வாய்ப்பும் பறிபோனதால் ரொம்பவே உற்சாகம் குறைந்து போய்விட்டார்.

இதையடுத்து இந்திப் பக்கமாய் போய் தீவிரமாய் முயன்றதால் ராஜ்குமார் சந்தோஷியின் இயக்கத்தில் ஒரு படம் கிடைத்துள்ளது. ஹீரோயின் எல்லாம் இல்லை, சும்மா ஒரு ஊறுகா ரோல் தான். இந்தப் படப்பிடிப்பு இன்னும் தொடங்காததால் சென்னைக்கே வந்துவிட்டார்.

சொந்த ஊரான ராஜஸ்தான் பக்கம் போனால் மொத்தமாக மறந்துவிடுவார்கள் என்பதால் பெரும்பாலான நாட்கள் சென்னையில் தான் இருக்கிறார் கிரண்.

கோடம்பாக்கம் முன்னணி நபர்களுக்கு போன் போட்டுப் பேசுவது, பார்ட்டி வைப்பது என நாட்களைக் கடத்தியவாரே தீவிரமான சான்ஸ் தேடும் படலத்தையும் தீவிரமாக நடத்தி வருகிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil