»   »  மீண்டும் வந்தார் கிரண்

மீண்டும் வந்தார் கிரண்

Subscribe to Oneindia Tamil

ராஜஸ்தானில் சும்மா இருக்கும் கிரண், சென்னையில் சும்மா இருக்கும் பிரபு தேவாவுடன்இணைகிறார்.

இந்த இரு சும்மாக்களும் ஜோடி போட்டு நடிக்கவுள்ளனர்.

தமிழ் மற்றும் தெலுங்கில் ஹாட்-கேக் ஆக இருந்த கிரண், எல்லை மீறி கவர்ச்சி காட்டியதால் இனிஇவரை வைத்து படத்தில் புதுசாய் காட்டுவதற்கு ஏதுமில்லை என கோடம்பாக்கம்கழற்றிவிட்டுவிட்டது.

தெலுங்கில் போய் பொறிகலங்க கவர்ச்சி காட்டிய கிரணுக்கு அந்த ஊர் ஹீரோக்கள் அன்பு காட்டியஅளவுக்கு சான்ஸ் வாங்கித் தரவில்லை. ஒரு படத்தில் புக் ஆனால் கூட ஹோட்டல் பில்லை அந்தத்தயாரிப்பாளரின் தலையில் கட்டிவிடலாம் என்று காத்திருந்த கிரணுக்கு அப்படி யாரும்சிக்கவில்லை.

மனம் வெதும்பி ஊருக்குப் போனவர், தனது மும்பை தொடர்புகளை வைத்து ராஜ்குமார்சந்தோஷியின் இந்திப் படத்தில் துணை நடிகை ரேஞ்சுக்கு நடித்தார். பின்னர் ஒரு கன்னட வாய்ப்புவர அதில் செகண்ட் ஹீரோயினாக உபேந்திராவுடன் நடித்தார் (இதில் ஹீரோயின் ரீமா சென்).

அத்தோடு, அவ்வப்போது சென்னைக்கு வந்து கோடம்பாக்கம் ஆசாமிகளுக்கு தண்ணி பார்ட்டிவைத்து தன் நினைவை ஊட்டிவிட்டுப் போனார்.

அப்படியே கொழுப்பு நீக்கும் சிகிச்சையும் எடுத்துக் கொண்டு ஆள் சிக் ஆகிவிட்டதாக அவரேசொன்னார். அதை நிரூபிக்க துண்டு, துக்கடாவுடன் தன்னை நச் என்று காட்டும் படங்களும் எடுத்துஆல்பத்தை கோடம்பாக்கத்தில் ரவுண்டுக்கு விட்டார். ஹூ..ஹூம்.. அசைந்து தரவில்லை நம் ஊர்ஆட்கள்.

இப்படி சோகத்தில் இருந்த கிரணுக்கு பிரபுதேவா மூலமாக ஒரு வாய்ப்பு வந்து கதவைத் தட்டஅடுத்த வண்டி பிடித்து சென்னைக்கு வந்துவிட்டார்.

வந்தவுடன் தான் தெரிந்தது, படத்தில் இரண்டு ஹீரோயின்கள் என்பது. ஆனாலும் கிடைத்தவாய்ப்பை விடக் கூடாது என்பதில் தீவிரமாய் இருக்கும் கிரண், என்ன ரோல்னாலும் சரி என்றுசொல்லி அட்வான்ஸை வாங்கிவிட்டார்.

பிரபுதேவாவை வைத்து தைரியமாக படமெடுக்கும் அந்தத் தயாரிப்பாளரின் பெயர் பாஸ்கர்.தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற ஒரு படத்தை (பாஸ்கரே தயாரித்தது) அலிபாபாவும் 9திருடர்களும் என்ற பெயரில் எடுக்கிறார்.

இதில் பிரபுதேவாவுக்கு கிரண் சைடு ஜோடி தான். முக்கிய ஜோடியாக நடிக்கப் போவது தெலுங்குஅழகி அங்கிதா.

இது முழுக்கவும் நகைச்சுவைப் படமாம். ஹீரோவாக நடிப்பது மட்டுமல்லாமல் படத்துக்கு நடனஇயக்குனரும் பிரபுதேவா தான். பிசியான ஹீரோவாக இருந்தபோது, தனது அண்ணன் அல்லதுவேறு யாரையாவது கோரியோகிராபிக்கு போடச் சொல்வார் தேவா. இப்போது அவரே இதையும்பார்க்கப் போகிறார்.

படத்தின் இயக்குனர் பிரசாத். படப்பிடிப்பு ஆந்திராவிலும் கர்நாடகத்திலுமாக நடந்துகொண்டிருக்கிறது.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil