Kiran: எம்மாடியோ.. 44 வயதிலும் ரசிகர்களை கிறங்கடிக்கும் நடிகை கிரண்!
சென்னை:சினிமாவில் பிரபலமாக வேண்டுமென்றால் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்தால் போதும் என்பதால், பல நடிகைகள் அதில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு ஒரு சிலர் சினிமாவில் பிரபலமானார்கள். திறமையை வளர்த்துக் கொள்ளாமல் வெறும் கவர்ச்சி போட்டோக்களை மற்றும் வீடியோக்களை போட்டு கிடைத்த வாய்ப்பை அவர்களால் தக்க வைத்துக் கொள்ள முடியாததால், போன வேகத்திலேயே திரும்பி விட்டார்கள்.
அப்படி சோசியல் மீடியாவால், சினிமாவிற்கு வந்த தர்ஷா குப்தா, சினிமாவும் சீரியலும் கை கொடுக்காததால் தற்போது இன்ஸ்டாகிராமில் புது வழியில் சம்பாதித்து வருகிறார்.
அதே யுக்தியை பல நடிகைகள் கையில் எடுத்து instagramமே அலறும்படி விதவிதமான போட்டோ மட்டும் வீடியோக்களை போட்டு சம்பாதிக்கும் வேலையில் இறங்கி இருக்கிறார்கள். ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் உச்சபட்ச நடிகையாக இருந்த நடிகை கிரண். தற்போது instagram-ல் கவர்ச்சிபோட்டோவை பகிர்ந்து வருகிறார்.

நடிகை கிரண்: மும்பையை சேர்ந்த நடிகை கிரண், யாதீன் என்கிற இந்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்திற்கு பின் கோலிவுட்டிற்கு வந்த கிரண், நடிகர் சியான் விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் ஹீரோயினாக நடித்தார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தமிழில் அன்பே சிவம், வின்னர்,வில்லன் என அடுத்தடுத்து வெற்றிப்படத்தில் நடித்தார். பீக்கில் இருந்த கிரணுக்கு படவாய்ப்பு குறைந்ததை அடுத்து இந்தி பக்கம் வாய்ப்பு தேடி சென்றார். ஆனால், அங்கும் எதிர்பார்த்தபடி வாய்ப்பு வராததால், திருமலை படத்தில் வாடியம்மா ஜெக்கம்மா பாடலுக்கு நடனமாடி இருந்தார்.
கவர்ச்சி தாண்டவம்: அதன் பின் 'நியூ' படத்தில் எஸ்.ஜேசூர்யாவுடன் பல விவகாரமான காட்சியில் நடித்தார். அந்த படத்திற்கு பின் மொத்தமாக காணாமல் போன கிரண், வருமானத்திற்கு வழியில்லாததால், ஆண்களுக்கான பிரத்யேகமாக ஒரு ஆப்பை கண்டுபிடித்து, அதில், வீடியோ காலில் வந்தால் தனி ரேட், பேசினால் தனி ரேட் என கட்டணம் வசூலித்து வந்தார். இந்த ஆப்பில் பலர் பணத்தை கட்டி ஏமாந்து போனதாக இணையத்தில் புலம்பினார்கள். இப்படி பீல்ட் அவுட்டான நடிகைக்கு வனிதா விஜயகுமார், மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்து இருந்தார். அந்த படத்திலும் சிவராத்திரி பாடலுக்கு நடனமாடி இருந்தார். நடிகை கிரண், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டாப் குக்கூ... டூப் குக்கூவில் போட்டியாளராக உள்ளார்.
குவியும் லைக்குகள்: நடிகை கிரண் தற்போது, இன்ஸ்டாகிராமில், நீச்சல் குளத்தில், சிவப்பு பிகினியில் தனது முன்னழகு தெரியும் படி கவர்ச்சி காட்டி இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவை பார்க்கும் பலர் திட்டினாலும், நடிகை கிரணின் ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். நடிகை கிரணை இன்ஸ்டாகிராமில் மட்டும், மூன்று புள்ளி ஐந்து மில்லியன் பாலோவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











