»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

கோலிவுட்டில் கிரணின் ஆட்டம் முடிந்து கொண்டிருக்கிறது என்கிறார்கள். சான்சுக்காக எந்த நடிகையும் இறங்காதஅளவுக்கு மிகத் தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டு வாய்ப்புகளை பெற்று வந்தார்.

ஆனால், அளவுக்கு மீறி அவர் காட்டிய கவர்ச்சியே அவருக்கு எதிராகப் போய்விட்டது. இனி இவர் கவர்ச்சி காட்டஎன்ன மிச்சம் இருக்கிறது என்று ஒரு தரப்பு டைரக்டர்களும் நடிகர்களும் ஒதுக்க ஆரம்பித்துள்ளனர்.

நடிப்புக்கு முக்கியத்துவம் கொண்ட கேரக்டர்களைக் கொண்ட கதைகளை மையமாக வைத்து படம் எடுத்து வரும்இன்னொரு தரப்பு இயக்குனர்களோ நடிப்பே வராத கிரண் போன்றவர்களை படத்தில் வைக்கவே மறுத்துவருகின்றனர்.

நல்ல கதைகள், திறமையான டைரக்டர்களால் இயக்கப்பட்ட படங்களே வெற்றி பெற்று வரும் டிரண்ட் தமிழ்சினிமாவில் உருவாகிவிட்டதால், தங்கள் இஷ்டத்துக்கு இவரைப் போடு அவரைப் போடு என இளம் ஹீரோக்கள்ரெகமெண்டேசன் செய்வதையும் தவிர்த்து வருகின்றனர்.

இதனால் பார்ட்டி வைத்து ஹீரோக்களை வளைத்து சான்ஸ் பிடித்து வந்த கிரணுக்கு பயங்கர அடி. இப்போதுகிரணிடம் இருந்து இருந்து போன் வந்தாலே நடிகர்கள் பேச மறுக்கிறார்களாம்.

அடி மேல் அடியாக, வின்னர் படத்தில் கிரணின் படு பயங்கர கவர்ச்சிக்கு கடும் கத்திரி விழுந்துள்ளதாம்.விஜயகாந்த், சரத்குமார் என முந்தைய தலைமுறை ஹீரோக்களுடன் நடிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டகிரண், வின்னர் படத்தைத் தான் பெரிதும் நம்பியிருந்தார்.

நெடு நாட்களுக்குப் பின் இளம் ஹீரோவான பிரசாந்த்துடன் கிரண் நடித்து வெளியாக உள்ள படம் இது. இதன்மூலம் மீண்டும் ஒரு ரவுண்ட் வரலாம் என கணக்குப் போட்டிருந்தார்.

ஆனால், பாய்ஸ் படத்தினால் சென்சார் போர்டு கடும் விமர்சனத்துக்கு உள்ளானதைத் தொடர்ந்து கண்களில்விளக்கெண்ணையும், நன்கு சாணை பிடித்த கத்திரியுமாக படங்களை சென்சார் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இதில் வசமாக சிக்கியது வின்னர்தானாம். பிரசாந்த்தும் கிரணும் நடித்த இந்தப் படம் வெகு காலமாகஎடுக்கப்பட்டது. படத்தின் கதை சரியாக இல்லாததால் கிரணை ஓவர் கவர்ச்சி காட்ட வைத்தனர். இதை வைத்துஓட்டி விடலாம் என திட்டமிட்டவர்களின் வாயில் மண் விழுந்துள்ளது.

இந்தப் படத்தில் கிரண் ஆடும் ஒரு பாடலுக்கு 18 இடங்களில் கட் விழுந்துள்ளதாம். பெரும் கவலையில்இருக்கிறார் கிரண்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil