»   »  மீண்டும் கிரண்!

மீண்டும் கிரண்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Kiran
தமிழ் தள்ளி விட்டு விட்டதால், மலையாளத்தில் மல்லுக்கட்ட கிளம்பியுள்ளார் கிரண்.

வடக்கிலிருந்து தெற்கத்தி சீமைக்கு வந்து கலக்கிய நாயகிகளில் கிரணும் ஒருவர். ஜெமினி மூலம் நடிக்க வந்த கிரண், குறுகிய காலத்தில் வேகமாக முன்னேறினார். முடிந்தவரை கிளாமராகவே நடித்தார். அவர் கிளாமரைக் குறைத்துக் காட்டி நடித்த படம் என்றால் அது அன்பே சிவம். உச்சகட்ட கிளாமர் என்றால் வின்னர்.

அவரது கிளாமர் ரசிகர்களுக்கு சீக்கிரமே சலிப்பை ஏற்படுத்தியதால் ஏறக்கட்டி விட்டனர் கிரணை. இதனால் தமிழில் வாய்ப்பிழந்து வருத்தமடைந்த கிரண், மலையாளத்திற்குப் புகுந்தார்.

மோகன்லாலுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்தார். அந்தப் படம் ஷாஜி கைலாஷ் இயக்கியது. அதுவும் கிரணுக்கு கை கொடுக்கவில்லை. இப்படி எல்லாக் கதவுகளும் அடைபட்டு விட்டதால் சொந்த ஊரில் கொஞ்ச காலம் இருந்த கிரண் இப்போது மீண்டும் திரும்பி வந்துள்ளார்.

ஆனால் இந்த முறை தமிழுக்கு வராமல் மலையாளத்திற்குப் போயுள்ளார். மாயக்காழ்ச்சா என்ற புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

அகிலேஷ் குருவிலாஸ் என்பவர் இப்படத்தை இயக்குகிறார். படத்தில் கிரண்தான் நாயகி. அரவிந்தர், சுதீஷ், ஜெயகிருஷ்ணன், சாய்குமார், ஹனீபா, கேப்டன் ராஜு உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

மீண்டும் நம்பிக்கையுடன் வந்துள்ள மலையாளத்தில் கால் எடுத்து வைத்திருந்தாலும் தமிழுக்கும் விரைவில் வருவார் என நம்பலாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil