»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினியின் அடுத்த படம் குறித்து மெதுவாக தகவல்கள் வர ஆரம்பித்துள்ளன. டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் தான் என்பதுகிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

இந் நிலையில் இதில் ஹீரோயினாக கிரண் நடிக்கலாம் என்று தெரிய வருகிறது.

இதுவரை சிம்ரனைத் தான் ஜோடியாகப் போடுவது என பேசி வந்தார்கள். ஆனால், கிரணிடம் ரஜினி தரப்பில் சமீபத்தில் இருந்துபேசியுள்ளனர்.

இதை மிக ரகசியமாக வைத்திருக்கும்படியும் கூறியுள்ளார்களாம்.

ஆனால், வெளியில் விஷயம் கசிந்துவிட்டது. விக்ரம், கமல் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டகிரண் சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேரப் போகிறார்.

படத்தைத் தயாரிக்கப் போவது ரஜினி தான். கதை ரெடியாகிவிட்டதா என்று தெரியவில்லை.

கதைக்காக கே.எஸ்.ரவிக்குமாருடன்சில நாட்கள் பெங்களூரில் முகாம் போட்டு விவாதம் நடத்தினார் ரஜினி என்பது பழைய செய்தி.


எதற்கும் தயார் ஆஷிமா:

ரமணாவில் அடக்க ஒடுக்கமாக நடித்தார் ஆஷிமா. எந்த வாய்ப்பும் வரவில்லை.

இதனால் முழு கவர்ச்சிக்குத் தாவத்திட்டமிட்டுள்ளார். இது பழைய செய்தி தான்.

ஆனால், இப்போது தன்னை விதவிதமாய் மிகக் கவர்ச்சியாய் படம் எடுத்து தயாரிப்பாளர்களுக்கும் டைரக்டர்களுக்கும் அனுப்பிவருகிறார் என்பது தான் புது நியூஸ்.

ரமணா ஊத்தியதால் ஆசிமா பக்கம் யாரும் திரும்பவேயில்லை.

இதனால் தான் அவரிடம் இந்த அதிரடி மாற்றம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil