»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கிரணின் தொந்தியும், லேசான முதுமைத் தோற்றம் அவருக்கு நிறைய வாய்ப்புகளை அள்ளித் தந்துள்ளது.

த்ரிஷா, மீரா, பாவ்னா, ஷெரீன், ஸ்னேகா போன்றவர்கள் கால்ஷீட் கொடுக்கத் தயாராக இருந்தாலும் அவர்களை ஜோடியாகப் போடவிஜய்காந்த், சரத்குமார், அர்ஜூன் போன்ற மூத்த நடிகர்களுக்கு விருப்பமில்லையாம்.

தங்களுக்கு தங்கச்சி அல்லது மகள்கள் போல காணப்படுவார்கள் என்பதால் மீனா, ரோஜா, தேவயானி ரேஞ்ச் நடிகைகளையே இவர்கள்அதிகம் விரும்பி வந்தனர். அதிலும் மீனா இவர்களுக்கு ரொம்பவே ஒத்துப் போனார்.

ஆனால், இப்போது மீனாவே தூது விட்டாலும் இவர்கள் யாரும் அவரைக் கண்டுகொள்ளவில்லை. அந்த அளவுக்கு அவர்போரடித்துவிட்டார். சிம்ரனோ இவர்களுக்கு கால்ஷீட் தரத் தயாராக இல்லை.

இதனால் இவர்களால் இப்போது அதிகம் விரும்பப்படும் ஹீரோயின் கிரண் தான். அதிலும் தனது தாராளமான நடவடிக்கைகளால்அனைத்து வயது ஹீரோக்களையும் ரொம்பவே கவர்ந்துவிட்டார் கிரண்.

தானே போன் போட்டுப் பேசும் கிரண், நடிகர்களை வீட்டுக்கு பார்ட்டிக்கு அழைத்து அவர்களது அன்பைப் பெற்று வருகிறார். அவரதுதீவிர முயற்சிகளுக்கு கைமேல் பலனும் கிடைத்துவிட்டது. ஏகப்பட்ட வாய்ப்புக்களைக் குவித்துவிட்டார்.

இப்போது விஜய்காந்த்தின் தென்னவன் படத்தில் இவர் தான் ஜோடி. இது தவிர சரத்குமார், அர்ஜூன் ஆகியோரின் படங்களும் கைவசம்உள்ளன.

அதே நேரத்தில் இளம் ஹீரோக்கள் படங்களிலும் நடித்து வருகிறார். பிரசாந்தின் வின்னப் படத்திலும் அஜீத்தின் மகாவிலும் இவர் தான்ஹீரோயின்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil