»   »  பண மோசடி விவகாரம்: ஹைகோர்ட் உத்தரவுப்படி நடிகை ஷில்பா ஷெட்டி மீது போலீசார் வழக்கு

பண மோசடி விவகாரம்: ஹைகோர்ட் உத்தரவுப்படி நடிகை ஷில்பா ஷெட்டி மீது போலீசார் வழக்கு

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: பணமோசடி விவகாரத்தில் ஹைகோர்ட் உத்தரவுப் படி நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் மீது கொல்கத்தா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மும்பையின் பாந்த்ரா பகுதியில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் நடிகை ஷில்பா ஷெட்டி.இந்த நிறுவனம் சார்பில் கொல்கத்தாவை சேர்ந்தா எம்.கே. மீடியா நிறுவனத்திடம் இருந்து ரூ. 9 கோடி பணம் பெறப்பட்டது.

Kolkata police register fraud case against Shilpa Shetty, Raj Kundra

இந்தப் பணமானது 2 ஆண்டுகளில் 10 தவணைகளாக திருப்பித் தரப்படும் என்றும், தங்களது நிறுவனத்திலிருந்து ரூ. 30 லட்சம் மதிப்பிலான பங்குகள் எம்.கே.மீடியாவுக்கு வழங்கப்படும் என்றும் அப்போது உறுதி அளிக்கப் பட்டுள்ளது. ஆனால், கூறியபடி ஷில்பாவின் நிறுவனம் பணத்தைத் திருப்பித் தரவில்லை.

இது தொடர்பாக எம்.கே.மீடியா நிறுவனம் கொல்கத்தா ஹைகோர்ட்டில் வழக்குத் தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த ஹைகோர்ட், ஷில்பா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டது.

அதன்படி எம்.கே. மீடியா நிறுவனம் சார்பில் தேபஷிஸ் குகா என்பவர் கொல்கத்தா ஷேக்ஸ்பியர் சாரணி போலீசில் புகார் செய்தார். இதை பெற்றுக்கொண்ட போலீசார் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

English summary
Kolkata police on Saturday lodged a case of fraud and initiated investigation against actress Shilpa Shetty and her industrialist husband Ripu Sudan Kundra (aka Raj Kundra) of Essential Sports private Ltd (a Mumbai based company).

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil