சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகைகள்... கவலையில் ரசிகர்கள்
சென்னை : கோலிவுட்டை சேர்ந்த பலரும் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். சத்யராஜ், அருண் விஜய், டி.பி.கஜேந்திரன், மகேஷ்பாபு, விஷ்ணு விஷால் என வரிசையாக பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
சமீபத்தில் தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கமலஹாசன், வடிவேலு ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். இந்நிலையில் தற்போது திரையுலகை சேர்ந்து பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்து தாங்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பதை சோஷியல் மீடியா மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.
பலரின் மனம் கவர்ந்த பிரபல நடிகைகள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது. சோஷியல் மீடியாவில் தங்களின் ஃபேவரைட் நடிகைகள் குணமடைய வாழ்த்துக்களையும், பிரார்த்தனைகளையும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். அப்படி சமீபத்தில் கோலிவுட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

த்ரிஷா
வயது ஏற ஏற அழகு கூடிக் கொண்டே செல்லும் என கூறும் நடிகைகளில் த்ரிஷாவும் ஒருவர். பலரின் கனவு தேவதையாக இருந்து வரும் த்ரிஷா, தற்போது மார்க்கெட் மவுசு குறையாமல், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதோடு போராடி வருவதாக சோஷியல் மீடியாவில் தெரிவித்தார்.

மீனா
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு டாப் ஹீரோயினாக வலம் வந்த மீனா, சிறிது பிரேக்கிற்கு பிறகு மீண்டும் நடிக்க வந்தார். இப்போது தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அழுத்தமான ரோல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இந்த ஆண்டில் தங்கள் வீட்டிற்கு முதல் விருந்தாளியாக கொரோனா வந்துள்ளதாகவும், தான் தனிமையில் இருப்பதாகவும் மீனா, தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

சோபனா
பிரபல நடிகையான சோபனா, தனக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டிருப்பதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இரண்டு தடுப்பூசிகள் போட்டுக் கொண்ட பிறகும் தான் ஒமைக்ரான் தொற்றுக்கு ஆளாகி உள்ளதாகவும், அனைவரும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
Recommended Video

குஷ்பு
சின்னத்திரை, சினிமா, அரசியல் என கலக்கி வரும் குஷ்பு, சமீபத்தில் உடல்நிலையை செமயாக குறைத்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். இவரின் மாற்றத்தை பார்த்து பலர் லவ் ப்ரபோசே செய்து விட்டனர். பலரையும் வியக்க வைத்த குஷ்பு, இரண்டு அலைகளில் தப்பி, மூன்றாவது அலையில் கொரோனாவிடம் தான் சிக்கிக் கொண்டதாக இன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தனிமையில் இருப்பது தனக்கு பிடிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











