»   »  நானு, நானு, நானு..: பேயாட்டம் போட முந்தியடிக்கும் ஹீரோயின்கள்

நானு, நானு, நானு..: பேயாட்டம் போட முந்தியடிக்கும் ஹீரோயின்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பேய் படங்களில் நடிக்க கோலிவுட் ஹீரோயின்கள் போட்டா போட்டி போடுகின்றனர்.

சில காலமாகவே கோலிவுட் ரசிகர்களுக்கு பேய் படங்கள் தான் பிடித்துள்ளது. அதனால் திரைக்கு வரும் பேய் படங்களை எல்லாமல் பல முறை பார்த்து ஹிட்டாகிவிடுகிறார்கள். இதை கவனித்த இயக்குனர்களும் தொடர்ந்து பேய் படங்கள் எடுத்து வருகிறார்கள்.

எத்தனை பேய் வந்தாலும் நாங்கள் பார்ப்போம் என்று ரசிகர்களும் ஆவலாக உள்ளனர்.

நடிகைகள்

நடிகைகள்

பேய் படங்களில் நடிகர்கள் அசத்தி வருகிறார்கள். ஆண் பேயை விட பெண் பேயே சக்திவாய்ந்தது என்று பலர் கருதுகிறார்கள். இந்நிலையில் தான் முன்னணி நடிகைகளான ஹன்சிகா, நயன்தாரா, த்ரிஷா உள்ளிட்டோரும் பேய் படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டனர்.

நாங்களும்

நாங்களும்

முன்னணி நடிகைகள் பேய் படங்களில் வந்து மிரட்டுவதைப் பார்த்த பிற ஹீரோயின்கள் நாங்களும் பேயாக வருவோம்ல என்று இயக்குனர்களிடம் கூறி வருகிறார்கள். அடுத்த முறை பேய் படம் எடுத்தால் என்னை அழையுங்கள் என்று நடிகைகள் கூறுகிறார்களாம்.

பேய்க்கு மவுசா?

பேய்க்கு மவுசா?

பேய் படத்தில் வந்து பயமுறுத்துவதற்கு நடிகைகளுக்கு இவ்வளவு ஆசையா என்று நினைத்தால் அந்த ஆசைக்குப் பின்னால் வேறு ஒரு காரணமும் உள்ளது தெரிய வந்துள்ளது.

முக்கியத்துவம்

முக்கியத்துவம்

ஹீரோயின் பேயாக நடித்தால் அந்த படத்தில் முன்னணி ஹீரோ யாரும் இருக்க மாட்டார். அதனால் ஹீரோயினுக்கு தான் முக்கியத்துவம். போஸ்டர் துவங்கி விளம்பரம் வரை அனைத்திலும் ஹீரோயினை முன்னிலைப்படுத்துவார்கள் அல்லவா அது தான் நடிகைகளை கவர்ந்துள்ளது.

English summary
Kollywood actresses are showing interest in ghost movies as fans are loving those movies and making them a big hit.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil