»   »  வித்தியாச கொங்கணா

வித்தியாச கொங்கணா

Subscribe to Oneindia Tamil

வங்கத்துப் பெண் கொங்கணா சென் படு வித்தியாசமான நடிகை, விதம் விதமான வித்தியாசமான ரோல்களில் மட்டுமே நடிப்பது என பிடிவாதமாக இருந்து அதை சாதித்தும் கொண்டிருக்கிறார்.

இருபது படங்களை முடிக்க இன்னும் இரண்டு படங்களே பாக்கி கொங்கணாவுக்கு. ஆனால் இதுவரை நடித்த அத்தனை படங்களிலும் கொங்கணாவின் வேடங்கள் படு வித்தியாசமானவை.

சில வேடங்களில் வில்லங்கமாகவும் நடித்தவர் கொங்கணா. இப்படித்தான் நடிப்பேன் என்று பிடிவாதமாக இருக்கும் கொங்கணா, சாதாரண வேடங்களுக்கான நடிகை நான் அல்ல என்றும் கூறுகிறார்.

வித்தியாசமான வேடங்களிலேயே நடித்துப் பழகி விட்ட கொங்கணா தற்போது மெட்ரோ என்ற இந்திப் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் 30 வயதாகியும் கல்யாணம் செய்து தொள்ளாமல் இருக்கும் முதிர் கன்னி வேடம் கொங்கணாவுக்கு.

இந்த வேடத்தில் வெளுத்துக் கட்டியுள்ளாராம் கொங்கணா. ஒரு கன்னிப் பெண்ணுக்கு சமுதாயத்தில் என்ன மாதிரியெல்லாம் சிக்கல்கள் வரும், விமர்சனங்கள் எழும், கசமுசாக்கள் கிளம்பும் என்பதை இந்தப் படத்தில் சொல்லியுள்ளனராம்.

இந்தப் படத்தில் நடித்த அனுபவத்தை வைத்து இன்னொரு வித்தியாச ஆசை பிறந்துள்ளதாம் கொங்கணாவுக்கு. அதாவது கணவரால் கைவிடப்பட்ட மனைவி அல்லது கணவரை இழந்த மனைவி வேடத்தில் வித்தியாசமாக, இதுவரை யாரும் நடித்திராத அளவுக்கு நடிக்க வேண்டும் என்பதே கொங்கணாவின் அந்த லேட்டஸ்ட் வித்தியாச ஆசை.

ரொம்ப வினோதமாக இருக்கிறாரே கொங்கணா

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil