கூமாப்பட்டிக்கு அல்வா.. சிம்புவைத்தான் கட்டிப்பேன்.. சீன் போட்ட சீரியல் நடிகை.. டி. ராஜேந்தர் அழுதுட்டாரே!
சென்னை: சிம்பு தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவர். இப்போது இரண்டாவது இன்னிங்ஸில் அடித்து ஆடிவரும் அவர் எப்போது திருமணம் செய்துகொள்வார் என்பதுதான் பலரது கேள்வியாக இருக்கிறது. ஆனால் அவர் அது தொடர்பாக எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் இருக்கிறார். மறுபக்கமோ அவருக்கு பெண் பார்க்கும் படலம் மும்முரமாக நடந்துவருகிறது என்ற தகவலும் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது.
டி.ராஜேந்தரின் மகனான சிம்பு பல திறமைகளை தன்னிடத்தில் கொண்டிருப்பவர். சிறு வயதிலேயே நடிக்க ஆரம்பித்துவிட்ட அவர் இள வயதிலேயே இயக்குநர் அவதாரம் எடுத்து அதில் வெற்றியையும் பெற்றவர். இடையே நடிகை நயன்தாராவை காதலித்த அவர்; அந்த உறவிலிருந்து வெளியே வந்தார். அதற்கு யூகங்களாக பல காரணங்கள் சொல்லப்பட்டன. நயன் இப்போது இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து செட்டிலாகிவிட்டார்.
விலகிய சிம்பு: நயனுடனான காதலுக்கு பிறகு நடிகை ஹன்சிகாவை காதலித்தார் எஸ்டிஆர். அஜித் - ஷாலினி எப்படி சக்சஸ்ஃபுல் ஜோடியாக வலம் வருகிறார்களோ அதேபோல் தாங்களும் வருவோம் என இரண்டு பேருமே அறிவித்தார்கள். ஆனால் யார் கண் பட்டதோ யார் காரணமோ தெரியவில்லை இந்தக் காதலும் பாதியில் முடிந்தது. இந்தத் தோல்விக்கு பிறகுதான் சில காலம் சினிமாவிலிருந்து விலகியிருந்தார் சிம்பு.

மீண்டும் வந்த அட்மேன்: ஒருகட்டத்தில் அவர் இனி காலி என்று பலரும் கூறிய சூழலில்; உடல் எடையை குறைத்து பழைய ஃபார்முடன் திரும்பி வந்தார். அந்தவகையில் அவர் நடித்த மாநாடு, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்கள் சக்கைப்போடு போட்டன. அதனையடுத்து நடித்த பத்து தல, தக் லைஃப் ஆகிய இரு படங்களுமே தோல்வியை சந்தித்தன. அதிலும் கமலுடன் அவர் நடித்த தக் லைஃப் பட நிலைமை ரொம்பவே பரிதாபத்திற்குரியதாக மாறியது. இப்போது அவர் அஷ்வத் மாரிமுத்து, வெற்றிமாறன் உள்ளிட்டோரின் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.
எப்போது திருமணம்: இதற்கிடையே சிம்பு எப்போது திருமணம் செய்துகொள்வார் என்ற எதிர்பார்ப்பு அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி ரசிகர்களிடமும் இருக்கிறது. நடிகை நிதி அகர்வாலை அவர் காதலிக்கிறார் என்றெல்லாம் வதந்திகள் பரவின. அதுமட்டுமின்றி அவருக்கு தங்கள் உறவினர் பெண் ஒருவரை திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்ததாகவும் ஒரு பேச்சி ஓடிக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆசையை சொன்ன நடிகை: அதேசமயம் சிம்பு இதுகுறித்தெல்லாம் எதுவும் ரியாக்ட் செய்துகொள்வதில்லை. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்தும் ரியாலிட்டில் ஷோவில் போட்டியாளராக பங்கேற்றிருக்கும் சாந்தினி, அந்நிகழ்ச்சிக்கு சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் சிறப்பு விருந்தினராக வந்திருந்தபோது, 'சார் நான் திருமணம் என்ற ஒன்று செய்துகொண்டால் அது சிம்புவைத்தான் செய்துகொள்வேன்' என்றார்.
கலங்கிய ராஜேந்தர்: இதை கேட்டு எமோஷனல் ஆன ராஜேந்தரோ கண்கள் கலங்கியபடி, 'ஒரு பெண்ணையோ, மனைவியையோ காதலிப்பது மட்டும் காதல் இல்லை. பெற்ற மகனை காதலிப்பதும் காதல்தான். என் மகனை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று சொல்கிறீர்கள். நான் உங்களை தவறாக நினைத்துக்கொள்ளவில்லை. உண்மையிலேயே அவனை காதலிக்கும் பெண்ணை இறைவன் சீக்கிரம் காட்ட வேண்டும்" என்றார். இந்த வீடியோ ட்ரெண்டாகியிருக்கிறது. மேலும் இதனைப் பார்த்த ரசிகர்களோ அய்யய்யோ கூமாபட்டிக்கு சாந்தினிக்கு அல்வா கொடுத்துவிடுவாரோ என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள். முன்னதாக அந்த நிகழ்ச்சியில் சாந்தினியும், கூமாபட்டி புகழ் தங்கபாண்டியும் ஜோடியாக நடனம் ஆடிவருகிறார்கள். அவ்வப்போது சாந்தினியிடம் தங்கபாண்டி ரொமான்ஸ் என்கிற பெயரில் ஜாலியாக நடந்துகொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதை வைத்துதான் ரசிகர்கள் இப்படி கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











