»   »  மறுபடியும் டிவியில் கௌசல்யா

மறுபடியும் டிவியில் கௌசல்யா

Subscribe to Oneindia Tamil
Kowsalya
பெரிய திரையிலிருந்து சின்னத் திரைக்கு மாறி, இடையில் பெரிய கேப் விட்டிருந்த முன்னாள் நாயகி கௌசல்யா, மீண்டும் டிவிக்குத் திரும்பியுள்ளார்.

செகண்ட் ரேங்க் முன்னணி நாயகர்களுடன் ஒரு ரவுண்டு அடித்தவர் கெளசல்யா. கன்னடத்திலிருந்து வந்த கெளசல்யா, தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் சொல்லிக் கொள்ளும்படியாக நடித்தவர்.

தாய் மொழியான கன்னடத்தை விட தமிழிலும், மலையாளத்திலும்தான் அவர் நிறையப் படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் நந்தினி என்ற பெயரில் நடித்து வந்தார் கெளசல்யா.

இடையில் அவருக்கு மார்க்கெட் தொய்ந்து போகவே டிவி பக்கம் திரும்பினார். மனைவி என்ற மெகா சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தினார். பிறகு விஜய் டிவியில் வந்த ஒரு தொடரில் நடித்தார். அதன் பின்னர் பெங்களூருக்கே திரும்பிப் போய் விட்டார்.

இந்த நிலையில் பெரிய இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் டிவிக்குத் திரும்பியுள்ளார் கெளசல்யா. ஜெயா டிவியில் டிசம்பர் 10ம் தேதி முதல் இரவு 8 மணி முதல் எட்டரை மணி வரை ஒளிபரப்பாகவுள்ள அலைபாயுதே என்ற புதிய மெகா சீரியலில் கெளசல்யாதான் நாயகி.

இரு சகோதரிகளுக்கு இடையிலான கதையாம் இது. இந்தத் தொடரின் பெரும் பகுதியை மலேசியாவில் ஷூட் செய்துள்ளனர் என்பது இந்தத் தொடரின் ஒரு சிறப்பம்சம்.

ஜெயா டிவியில் ஒளிபரப்பாகவுள்ள முதலாவது பிரமாண்டத் தொடர் இது என்பது இன்னொரு விசேஷமாம்.

சின்னத்திரையில் 2வது இன்னிங்ஸை ஆரம்பிக்கும் கெளசல்யா இதிலும் வெற்றிக் கொடி நாட்ட ஆர்வத்துடன் ஆயத்தமாகியுள்ளார்.

Read more about: kowsalya
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil