»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

பிரியமுடன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த கெளசல்யா, இப்போது திருமலை படத்தில் அவருக்குஅண்ணியாக படத்தில் நடிக்கிறாராம்.

முன்பெல்லாம் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்த பல நடிகைகள் பின்னாளில் அவருக்கு அம்மாவாக, அக்காவாக,அண்ணியாக நடித்துள்ளனர். அதேபோல ரஜினிக்கு ஜோடியாக நடித்த சில நடிகைகள் அவருக்கு அம்மாவாகநடித்துள்ளனர்.

அந்த பாரம்பரியத்தை இப்போதைய இளம் நடிகர்களில் முதல் முறையாக தொடங்கி வைத்துள்ளார் விஜய்.விஜய்யுடன் பிரியடன், நேருக்கு நேர் ஆகிய படங்களில் ஜோடி சேர்ந்து நடித்த கெளசல்யா இப்போதுபெங்களூரில் உள்ள தனது வீட்டில் சும்மா இருக்கிறார்.

சொந்த மொழியான கன்னடமும் கை கொடுக்கவில்லை. இதனால் சோலை விளம்பரங்களில் நடித்துவிட்டுமலையாளத்தில் சில படங்களில் நடித்தார். அங்கும் நினைத்தபடி சான்ஸ்கள் வரவில்லை.

இதனால் சும்மா இருப்பதைவிட ஓல்டு கெட் அப் வேடங்களைச் செய்யத் தயாரான அவர் முதலில் முயற்சி செய்ததுதமிழில் தான். முயற்சிக்கு கை மேல் பலனான திருமலை பட சான்ஸ் கிடைத்துவிட்டது. இந்தப் படத்தில் விஜய்க்குஅண்ணியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

அண்ணியாக நடிப்பதில் எந்த வருத்தம் எனக்கு இல்லை என்கிறார் கெளசல்யா, தொடர்ந்து அஜீத், பிரசாந்த்,சூர்யா என எல்லா இளம் நடிகர்களுக்கும் அண்ணி, அக்கா வேடத்தில் நடிக்கத் தயார் என்றும் கூறுகிறார்.

கெளசல்யாவுக்கு வருத்தம் இருக்கிறதோ இல்லையோ அவரது ரசிகர்கள், ரசிகைகளுக்கு இது நிச்சயம் வருத்தம்தரும் தான்.

எப்படியோ தமிழுக்கு இன்னொரு அழகிய அண்ணி கிடைத்துவிட்டார்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil