»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

அல்ட்ரா மாடர்ன் டிரஸ் போட்டு நடிக்க ஆசை. எப்பவும் சாரி உடுத்தி நடிச்சு ரொம்ப போரடிச்சுப் போச்சு என்றுகவுசல்யா சிரிக்க, சிரிக்க பேசியது நமக்கு ஐஸ்க்ரீம் குடித்தது போல் இருந்தது.

காலமெல்லாம் காதல் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் படத்தில் அறிமுகமானார். அதற்குப் பின் கொஞ்சம்,கொஞ்சமா ரொம்ப நிதானமாக செலக்டிவான தமிழ் படங்களில் நடித்து சுமார் 7 க்கும் மேற்பட்ட படங்களில்நடித்து முடித்து விட்டார்.

ததும்பும் நாகரிகத்தின் சின்னமாய் அசர வைக்கும் ஆங்கிலத்திலும், கொஞ்சும் மழலைத் தமிழிலுமாய் அவர்பேசியது நம்மை மலைக்க வைத்தது.

எல்லா ரோல்களையும் ஏத்துக்க மாட்டேங்கறீங்களே ஏன் கவுஸ்? (செல்லமா நாங்க கவுஸ் ன்னுதான் கூப்பிடுவோம்)

(புன்னகையுடன்) அப்படியெல்லாம் ஒண்ணுமில்லீங்க. ஸ்கோப் இருக்கற ரோல்ல நடிக்கறேன். சொல்லாமலேபடத்துல ஸ்கோப் இருக்கற மாதிரி தோணிச்சு. அதே மாதிரி ஒரு படத்துல நடிக்கும் போது டைரக்டர் சொல்றமாதிரிதான் நடிகை கேட்கணும்.

நம்ம ஏதாவது பேசினோம்னா அது பூதாகரமாயிடும். ஏன்னா அவங்க டேஸ்ட் படி தான் அவங்க எடுப்பாங்க.என்ன தான் டீம் ஒர்க் ன்னாலும் டைரக்டரோட டேஸ்ட் படி தான் படம் வரும். அப்போ நடிகைங்கற முறைல நாமதலையிடறது நல்லாயிருக்காது. இருந்தாலும் அப்பப்போ எனக்குன்னு க்ரியேட்டிவா ஏதாவது தோணினா அதைச்செய்வேன்.

காலமெல்லாம் காதல் வாழ்க படத்துல நடிச்சதுக்கப்புறம் வேறு படங்கள்ல நடிக்கவில்லையே ஏன்?

எனக்கு சரியான மானேஜர் கிடைக்கலன்னுதான் சொல்லணும். அப்புறமா நான் அடிக்கடி பெங்களூர் வந்துடுவேன்.சென்னைக்கும், பெங்களூருக்கும் மாறி, மாறி வரதால தொடர்ந்து பல படங்களோட வாய்ப்பு மிஸ்ஸாயிடுச்சு.

நீங்கள் நடித்த படங்கள் பற்றி...?

கார்த்திக் கூட பூவேலி. பிரசாந்த் கூட ஆசையில் ஓர் கடிதம். விக்ரமன் டைரக்ஷன்ல பிரபுதேவா கூட வானத்தைப்போல. முக்கியமா வானத்தப் போல எனக்கு நல்ல பிரேக் கொடுத்த படம்.

ஆசையில் ஓர் கடிதம் பிளாப் ஆயிடுச்சு. காரணம் தெரியல. ஸோ வாட்? தோல்வியையே நினைச்சு, நினைச்சுஎவ்வளவு நாள் தான் கலங்க முடியும்? மறந்துட்டு அடுத்த படத்துல நடிக்கற வேலயப் பாக்க வேண்டியதுதான்.(அதுதான் புத்திசாலித்தனம் கவுஸ்)

இப்போ, காதல் சீசன் போய் அம்மன் சீஸன் வந்திடுச்சில்ல. அதனால ராஜகாளியம்மன், கார்த்திக் கூட குபேரன்பண்றேன். ரெண்டுமே நல்ல ஹிட் ஆகணும்.

ஸ்விம்மிங் டிரஸ் போட்டு நடிப்பீங்களா?

சான்ஸே இல்ல. கண்டிப்பா அது மாதிரியெல்லாம் என்னால செய்ய முடியாது. வெஸ்டர்ன் கல்ச்சர்ல எனக்குஇன்ட்ரஸ்ட் இல்ல. முதல் முதலா நேருக்குநேர் படத்துல அல்ட்ரா மாடர்ன் டிரெஸ் போட்டு நடிச்சேன்.

அதுக்கப்புறமா எனக்கு எல்லா படங்கள்லயும் சாரி உடுத்தி நடிக்கச் சொல்றாங்க. சாரி ரொம்ப போர். அல்ட்ராமாடர்ன் டிரஸ் போட்டு ஜம்முன்னு ரெண்டு பாட்டுக்கு ஆடணும் போல இருக்கு.

உங்களோட கனவு ரோல்?

அப்படி எதுவும் இல்லீங்க. கிடைக்கற ரோல டக்கரா பண்ணணும்.

எதிர்கால திட்டம்?

நான் நடிக்க வந்து 3 வருடம் ஆயிடுச்சு. தமிழ், தெலுங்கு படங்கள்ல நடிக்கிறேன். தமிழ் சினி பீல்டுல எவ்வளவோகத்துக்க வேண்டிய விஷயங்கள் இருக்கு. டெக்னிக்கலா, க்ரியேட்டிவ்வா? கொஞ்சம் கொஞ்சமாத் தானேகத்துக்கணும். அதனால் தொடர்ந்து தமிழ் பீல்டு எவ்வளவோ கத்துக்கணும்ன்னு பிளான் பண்ணியிருக்கேன்என்றார் கவுசல்யா.

ஆல் தி பெஸ்ட் கவுஸ்.

Read more about: acting, interest, kousalya, modern dress

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil