»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கார்த்திக்- கெளசல்யா காம்பினேஷனில் தயாரான மனதில் படம் ஒரு வழியாய் திரைக்கு வரவுள்ளது.

சொதப்பல் திலகம் என்ற பட்டத்தை யாருக்குக் கொடுப்பீர்கள் என்று தயாரிப்பாளர்களிடம் கேட்டால்அவர்களின் ஒருமித்த தேர்வாக இருக்கக் கூடியவர் நடிகர் கார்த்திக்தான். இவருக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு,கால்ஷீட் கிடைக்காத ஒரு தயாரிப்பாளர் தாதா ஒருவரை நாடி, கார்த்திக்கை மிரட்டிச் செய்து, கால்ஷீட் பெற்றார்.

நடிகர் சங்கத் தலைவர் என்ற முறையில் கார்த்திக் சம்பந்தப்பட்ட பல புகார்களை பைசல் செய்திருக்கிறார்விஜயகாந்த். ஆனால், அவரது படத்திலேயே கால்ஷீட் சொதப்பல் செய்தார் கார்த்திக். அதனையடுத்து எங்கள்அண்ணா படத்தில் இருந்தே தூக்கப்பட்டார்.

சில மாதங்களுக்கு முன்பு படங்களே இல்லாத நிலையில், கடன் தொல்லையும் அதிகமாகவே அதிலிருந்து மீளஅதிமுகவில் தன்னை இணைத்துக் கொள்ள முடிவு செய்து போயஸ் கார்டன் பக்கம் போனார்.

ஆனால் அம்மாவின்அருட்கடாட்சம் கிடைக்காததால் திரும்பி விட்டார்.

கடன்களை அடைக்க வேறு வழியின்றி, கொடுப்பதைக் கொடுங்கோ என்று கூறி, நீண்ட காலத்துக்கு முன் காஷ்மீர்,மனதில் ஆகிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். முன்பு மாதிரி கால்ஷீட் சொதப்பினால் கடனை அடைக்கமுடியாது என்று நினைத்தாரோ என்னவோ, மனதில் படத்தை ஒரே மூச்சில் முடித்துக் கொடுத்தார்.

ஆனால், படத்தை வாங்கத் தான் யாரும் முன் வரவில்லை. இதனால் பெட்டியில் குட்டி போட்டு தூங்கிக்கொண்டிருந்த இந்தப் படம் ஒரு வழியாய் இப்போது வெள்ளித் திரையைப் பார்க்கப் போகிறது.

இந்தப் படத்தில் கார்த்திக்குக்கு இரட்டை வேடம். கதாநாயகனும் அவரே, வில்லனும் அவரே. கார்த்திக் வில்லனாகநடிக்கும் முதல் படம் இது தான்.

கார்த்திக்குக்கு ஜோடி கெளசல்யா. கவர்ச்சிகரமான படங்களை தயாரிப்பாளர்களுக்கும், பத்திரிக்கைகளுக்கும்சுற்றறிக்கை போல் அனுப்பி வாய்ப்பு தேடியதில் அவருக்குக் கிடைத்த வாய்ப்புதான் இது.

எதற்கும் தயார் என்று கெளசல்யா வரிந்து கட்டிக் கொண்டு நின்றதால் அவரை நன்றாகவே படத்தில் யூஸ் செய்துகொண்டிருக்கிறார்கள். இவரது கவர்ச்சி கைகொடுக்குமோ இல்லையோ என்ற சந்தேகம் இருப்பதால் போனஸாகஅபிநயாஸ்ரீயையும் சேர்த்துள்ளார்கள்.

ரொம்ப தைரியமான சில வினியோகஸ்தர்கள் படத்தை வாங்கி ரிலீஸ் செய்யப் போகிறார்கள். இதனால் வெகுசீக்கிரம் திரைக்கு வருகிறது மனதில்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil