»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

டிகை விஜி ஏற்கனவே மூன்று முறை தற்கொலை செய்து கொள்ள முயன்றார் என்று அவரது குடும்ப நண்பர் கிருஷ்ணகுமார் திங்கள்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

விஜி பற்றி எனக்கு மிக நன்றாகத் தெரியும். முடிவு எடுக்கும் விஷயத்தில் அவர் மிகவும் கண்டிப்பானவர். ஒரு விஷயத்தில் தீர்க்கமான முடிவெடுத்து விட்டால்அதிலிருந்து மாறவே மாட்டார்.

பேஜர் மூலம் தகவல்:

அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எனக்கு பேஜரில் செய்தி அனுப்பியிருந்தார். எப்படியாவது அவரைக் காப்பாற்றி விடலாம் என்று நினைத்து,அவரது வீட்டுக்குத் தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தேன்.

ஆனால் யாருமே எடுக்கவில்லை. இனியும் தாமதித்தால் ஆபத்து என்று நினைத்து நான் அவரது வீட்டுக்கு விரைந்தேன். 9.40 மணிக்கு பேஜர்கிடைத்தது. நான் 10.15 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்து விட்டேன். ஆனால் அதற்குள் அவர் இறந்து விட்டார்.

3 முறை தற்கொலை முயற்சி:

விஜி ஏற்கனவே 3 முறை தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துத் தோல்வியடைந்தார். 3 மாதங்களுக்கு முன்பு கூட 30 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டார்.அப்போது அவரை எப்படியோ காப்பாற்றி விட்டோம்.

மேக்கப்மேன்:

விஜி நடிக்க வந்த புதிதில் அவருக்கு மேக்கப் மேனாகச் சேர்ந்தேன். ரொம்ப மரியாதையான, ஒழுக்கமான பெண் அவர். நடிகை என்ற பந்தாவைஅவரிடம் நான் ஒரு போதும் பார்த்ததில்லை.

மருந்து விற்பனை பிரதிநிதி:

நான் தற்போது மருந்து விற்பனைப் பிரதிநிதியாக வேலை செய்து வருகிறேன். சினிமாவை விட்டு விலகி பல வருடங்கள் ஆகி விட்டன. இருப்பினும் விஜியின்குடும்ப நண்பராக இருக்கிறேன்.

ஒருவர் நம்மிடம் குறிப்பிட்ட அளவு தான் நண்பராக இருக்க வேண்டும் என்ற வரைமுறையெல்லாம் விஜிக்குக் கிடையாது. பழகி விட்டால்எங்கிருந்தாலும் மறக்க மாட்டார் விஜி.

இப்படிப்பட்ட பெண்ணை, அவர் தற்கொலை செய்து கொள்ளு முன் எனக்குப் பேஜர் செய்தும் என்னால் காப்பாற்ற முடியவில்லையே என்று வருந்துகிறேன்எனக் கண்ணீருடன் கூறினார்.

விஜியின் காதலர் தப்பி ஓட்டம்

விஜியின் கண்ணீர் கடிதம்

காதல் தோல்வியால் நடிகை விஜி தற்கொலை

Read more about: actor, actress, attempt, chennai, commit, viji
Please Wait while comments are loading...