»   »  எத்தனை இரவு அழுதுகிட்டே தூங்கியிருக்கேன் தெரியுமா?: இளம் ஹீரோயின் பேட்டி

எத்தனை இரவு அழுதுகிட்டே தூங்கியிருக்கேன் தெரியுமா?: இளம் ஹீரோயின் பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பல நாள் இரவு அழுது கொண்டே தூங்கியதாக பாலிவுட் நடிகை க்ரிட்டி சனோன் தெரிவித்துள்ளார்.

மகேஷ் பாபுவின் நே ஒக்கடினே படம் மூலம் நடிகையானவர் க்ரிட்டி சனோன். டைகர் ஷ்ராபின் ஹீரோபந்தி படம் மூலம் பாலிவுட்டில் அடி எடுத்து வைத்த அவர் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில் அவர் தனது சினிமா பயணம் குறித்து கூறுகையில்,

பயம்

பயம்

நான் கூச்ச சுபாவம் உள்ளவள். மேடை பயம் வேறு உண்டு. இந்நிலையில் விளம்பரப் படத்திற்காக கேமரா முன்பு நின்றபோது பயமே இல்லாமல் நடித்தது எனக்கே வியப்பாக இருந்தது.

நடனம்

நடனம்

நான் பள்ளி ஆண்டு விழாவில் நடனம் ஆடியதை பார்த்த பள்ளி முதல்வர் நீ நடனம் ஆடியதை பார்த்தபோது மாதுரி தீட்சித்தின் நினைவு வந்தது என்றார். அதை கேட்டு உலகின் சிறந்த டான்ஸர் நான் தான் என நினைத்து துள்ளிக் குதித்தேன்.

அழுகை

அழுகை

பட வாய்ப்புகள் தேடி நான் டெல்லியில் இருந்து மும்பைக்கு ஜாகையை மாற்றினேன். அதிகம் நண்பர்கள் இல்லாத நான் வீட்டை விட்டும் அதிகம் வெளியே சென்றது கிடையாது. இந்நிலையில் மும்பையில் தனிமையில் வாடி பல இரவு அழுது கொண்டே தூங்கியிருக்கிறேன்.

பானி பூரி

பானி பூரி

விரும்பி தான் நடிகையாகியுள்ளேன். ஆனால் பிரபலமாகியுள்ளதால் முன்பு போன்று சாலையோரம் உள்ள கடைகளில் பானி பூரி சாப்பிட முடியவில்லை, ஜாலியாக மால்களுக்கு செல்ல முடியவில்லை.

Read more about: bollywood, loneliness
English summary
Bollywood actress Kriti Sanon said that she cried many nights during early stage of her career.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil