Monalisa: அடிச்சது ஜாக்பாட்.. கோடிகளில் குளிக்கிறாரா கும்பமேளா மோனாலிசா? அவரே ஓபனா பேசிட்டாரே!
மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற கும்பமேளாவில், மோனாலிசா போஸ்லே ருத்ராட்ச மாலைகளை விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரது வசீகரமான கண்கள் மேளாவுக்கு வந்தவர்களை பெரிதும் கவர்ந்ததால், பலர் ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தனர். பலர் அவரது புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இதனால், மோனாலிசாவின் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவின, மேலும் அவரைப் பார்க்க பலர் கும்பமேளாவுக்கு திரளாக வந்தனர். இதன் விளைவாக, மோனாலிசா பெரும் புகழ் பெற்றார். இதனால் நடிகையாகவும் மாறியுள்ளார். தற்போது அவர் கோடிகளில் சம்பாதிப்பதாகவும், கிசுகிசுக்கப்பட்டது. அதற்கு அவரே பதில் அளித்துள்ளார்.
மோனாலிசா போஸ்லேவின் புகைப்படம் டிரெண்ட் ஆனதால், பார்க்க சிலர் ஆர்வத்துடன் கும்பமேளாவுக்கு பயணித்தனர், இதனால் அவர் மேலும் பிரபலமானார். பலர் அவருடன் செல்பி எடுக்க போட்டியிட்டனர், மேலும் அவருடன் ரீல்ஸ் உள்ளிட்ட வீடியோக்களை பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். மோனாலிசாவின் தோற்றம் மக்களிடையே இவ்வளவு பெரிய வரவேற்பையும் பாராட்டையும் பெறும் என அவரது குடும்பத்தினர் கனவிலும் நினைக்கவில்லை. இருப்பினும், அவரைப் பார்க்க கூட்டம் கூடியதால் அவர்களின் ருத்ராட்ச மாலை வியாபாரம் பாதிக்கப்பட்டது. இந்த சூழலில், மோனாலிசா இந்திய அளவில் பிரபலமாக ட்ரெண்ட் ஆனதை அடுத்து, இயக்குநர் சனோஜ் மிஸ்ரா அவரை சினிமாவில் நடிக்க வைக்க முன்வந்தார்.

முதல் பட இயக்குநர்: இயக்குநர் சனோஜ் மிஸ்ரா, இதுவரை 10 திரைப்படங்களை இயக்கியுள்ளார், அதில் 9 படங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன, மற்றொரு படம் வெளியாக உள்ளது. இந்தச் சூழலில், மோனாலிசா போஸ்லே இந்திய அளவில் பிரபலமாக ட்ரெண்ட் ஆனதை அடுத்து, அவரை தனது படத்தின் கதாநாயகியாக நடிக்க வைப்பதற்காக சனோஜ் மிஸ்ரா அவரது வீட்டிற்கு நேரில் சென்றார். இவர் சில மாதங்களுக்கு முன்னர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.
ஏமாற்றம்: எளிய குடும்பப் பின்னணியில் இருந்த மோனாலிசாவின் குடும்பத்திற்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு என்பது கற்பனையிலும் இல்லாத ஒன்றாக இருந்ததால், முதலில் அவர்கள் தயக்கம் காட்டினர். இருப்பினும், மோனாலிசா புத்திசாலித்தனமாக சிந்தித்து, இந்த அரிய வாய்ப்பை தவறவிடக்கூடாது என முடிவு செய்தார். சினிமாவில் நடிப்பதன் மூலம் தனது குடும்பத்தின் வறுமையை போக்க முடியும் என உறுதியாக நம்பினார். இதனால், இயக்குநர் சனோஜ் மிஸ்ராவின் அழைப்பை ஏற்றுக்கொண்டார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி, இணையத்தில் வேகமாக பரவின. சனோஜ் மிஸ்ராவின் கைதுக்குப் பின்னர் மோனலிசா கமிட் ஆன படம் டிராப் செய்யப்பட்டது.
கோடிகளில் சம்பளம்: ஆனால் இந்த படத்தில் கமிட் ஆனதும், பலரும் அவரை விளம்பரப் படங்களில், ஆல்பம் பாடல்களில், வெப் சீரிஸ்களில் கமிட் செய்தனர். மேலும் சில படங்களில் கமிட் ஆகியுள்ளார். மோனாலிசா அதிக படங்களில் கமிட் ஆனதால் தற்போது கோடிகளில் சம்பாதித்து, கோடிகளில் குளித்து வருகிறார் என்ற பேச்சு எழுந்தது. இதற்கு மோனாலிசாவே விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது, " மகா கும்பமேளாவில் இருந்தும், தாய் கங்கம்மா அருளினாலும் எனக்கு கொஞ்சம் பணம் கிடைக்கிறது. பலர் நினைப்பது போல் நான் கோடிக்கணக்கில் சம்பாதிக்கவில்லை. குடும்பத்தை நிம்மதியாக பார்த்துக் கொள்ளும் அளவுக்கு சம்பாதிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











