»   »  ஐஸ் க்ரீம் கடையில்அணலாக குமுறிய குஷ்பு

ஐஸ் க்ரீம் கடையில்அணலாக குமுறிய குஷ்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிறுவர், சிறுமியருக்கு செக்ஸ் கல்வியை அவசியம் அறிமுகப்படுத்த வேண்டும். எது சரி, எது தவறு என்று அவர்களுக்கு விளக்கிக் சொல்ல வேண்டியது அவசியம் எனறு நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

கல்யாணத்துக்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை, ஆனால் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம் என்று கூறப் போய் பெரும் சர்ச்சையில் சிக்கினார் குஷ்பு.

செருப்பு, விளக்குமாறுகளுடன் பெண்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் தான் பேசியதற்காக மன்னித்து விடுமாறு கண்ணீர் விட்டு மன்னிப்பு கேட்டார் குஷ்பு.

அந்த சர்ச்சை அத்தோடு ஓய்ந்தது. இப்போதெல்லாம் தமிழகத்திற்குள் எங்காவது பேச நேரிடும்போது படு ஜாக்கிரதையாக பேசி வருகிறார் குஷ்பு. ஆனால் பெங்களூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் செக்ஸ் கல்வி குறித்து சரமாரியாக கருத்து தெரிவித்துள்ளார்.

கால்சியம் கலந்த புதிய வகை ஐஸ்க்ரீம் வெளியீட்டு விழாவில்தான் செக்ஸ் கல்வி குறித்து குமுறித் தள்ளியுள்ளார் குஷ்பு. குஷ்பு கொட்டியவற்றில் சிலவற்றை உங்களுக்காக அள்ளித் தருகிறோம் ...

இந்தியாவில் செக்ஸ் விஷயத்தில் எல்லோருமே இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில்தான் எய்ட்ஸ் வேகமாக பரவி வருகிறது. இங்குதான் சிறுமிகள் அதிகஅளவில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகிறார்கள்.

இப்படி இருக்கையில் ஏன் அத்தனை பேரும் இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று எனக்கு சத்தியமாகப் புரியவில்லை.

அரசு ஒருபுறம் மக்களுக்கு ஆணுறைகள் குறித்த விழிப்புணர்வுக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. பல வகைகளிலும் அவற்றை மக்களுக்கு வினியோகிக்கிறார்கள் ஆனால் மறுபுறம் செக்ஸ் பற்றிப் பேசினாலே தப்பு, தப்பு என்று சீறுகிறார்கள். ஏன் இப்படி இரட்டை வேடம் போட வேண்டும்.

சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்வது குறித்து அடுக்கடுக்காக பேசுகிறார்கள். ஆனால் சிறுமிகளுக்கு செக்ஸ் குறித்து சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றால் பெரும் தப்பு என்று புலம்புகிறார்கள், எதிர்க்கிறார்கள்.

இந்தக் காலத்து சிறுவர், சிறுமியருக்கு எதையும் நாம் சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை. ஒரு வயதில் அவர்களுக்கு கம்ப்யூட்டரை அறிமுகப்படுத்தி வைத்து விடுங்கள்.

6 வயதில் இண்டர்நெட்டை தானாகவே கையாளும் அளவுக்கு அவர்கள் முன்னேறி விடுவார்கள். அதன் பின்னர் அத்தனை விஷயங்ளும் நாம் சொல்லிக் கொடுக்காமலேயே அவர்களது விரல் நுனியில் இருக்கும்.

சிறுவர், சிறுமியருக்கு செக்ஸ் கல்வியைக் கற்றுக் கொடுத்தால், எது தவறு, எது சரி என்பதை அவர்களுக்குப் புரிய வைக்கலாம். இதன் மூலம் பல தவறுகளை நாம் தடுக்க முடியும்.

சாதாரணாக தொட்டுப் பேசுவற்கும், தவறான நோக்கத்தில் தொட்டுப் பேசுவதற்கும் உள்ள வித்தியாசங்களை நாம் அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அப்போதுதான் அவர்களை அவர்களே பாதுகாத்துக் கொள்ள நாம் உதவ முடியும்.

பத்திரிக்கைகள், டிவி, இன்டர்நெட் மூலம் பல விஷயங்களை சிறுவர், சிறுமியர் பார்க்கிறார்கள். படிக்கிறார்கள். அதில் எது நல்லது, எது கெட்டது என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.

செக்ஸ் கல்வியை அறிமுகப்படுத்தினால் அவர்களுக்கு செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும் என்று கூறுவது மிகவும் தவறானது.

மக்களுக்குத் தேவையானதை செய்து தரும், அவர்களுக்கு அறிவூட்டும் கடமை அரசியல்வாதிகளுக்கு உள்ளது. ஆனால் நித்தாரியில் பல சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து ஒரு அரசியல்வாதி கூட கவலைப்படவில்லை. ஏன் என்று ஒருவர் கூட அங்கு போய் கேட்கவில்லை.

நிவாரண நிதி என்று 2 லட்சம் பணத்தைக் கொடுத்து விட்டால் போதுமா. போன குழந்தை மீண்டும் வந்து விடுமா.

நமது உலகம் மிகவும் முரண்பட்டது. இங்கு வசிப்பவர்கள் அத்தனை பேரும் முரண்பாடாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காதலர் தினத்தை எதிர்ப்பார்கள். சாதி விட்டு சாதி மணந்து கொள்பவர்களை கடுமையாக எதிர்ப்பார்கள், பெரும் ரகளையே நடக்கும்.

ஆனால் நாட்டில் நடக்கும் வன்முறையை யாரும் தட்டிக் கேட்க மாட்டார்கள். அரசியலில் சில தீய சக்திகள் கேட்பாரின்றி நடந்து கொள்வதை யாரும் தட்டிக் கேட்க மாட்டார்கள்.

இப்படிப்பட்ட முரண்பாடான விஷயங்களில் மக்கள்தான் தெளிவாக நடந்து கொள்ள வேண்டும் என்று குமுறித் தள்ளி விட்டார் குஷ்பு.

ஐஸ்க்ரீம் வெளியீட்டு விழாவில் இவ்வளவு அணலா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil