லீவில் சென்ற நீதிபதி: ஜாமீன் பெற முடியாமல் திரும்பிய குஷ்பு

நடிகை குஷ்பு சட்டசபை தேர்தலின் போது திமுகவை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தார். அவர் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி, பழனிச்செட்டிபட்டி ஆகிய ஊர்களிலும் பிரசாரம் மேற்கொண்டார்.
குஷ்பு தேர்தல் விதிகளை மீறி ஆண்டிப்பட்டி, பழனிச்செட்டிபட்டியில் அதிக வாகனங்களைப் பயன்படுத்தியதாக அவர் மீது இரண்டு ஊர்களின் போலீசாரும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்குகளில் முன்ஜாமீன் கேட்டு குஷ்பு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். ஆனால் இந்த மனுவை விசாரித்த நீதிபதி அவரை ஆண்டிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றுக்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
இதையடுத்து குஷ்பு நேற்று காலை 10.30 மணிக்கு ஆண்டிபட்டி நடுவர் நீதிமன்றத்திற்கு வந்தார். ஆனால் நீதிபதி சுந்தரய்யா விடுமுறையில் சென்றுவிட்டார் என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டது. பெரியகுளம் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றுக்கொள்ளுமாறு வழக்கறிஞர்கள் ஆலோசனை கூறினர்.
ஆனால் அங்குள்ள நீதிபதி சங்கரும் விடுமுறையில் சென்றிருந்து தெரிய வந்ததால் ஏமாற்றம் அடைந்த அவர் பெரியகுளம் செல்லாமல் பகல் 12.30 மணி அளவில் சென்னைக்கே திரும்பினார்.
அப்போது குஷ்பு கூறியதாவது,
நீதிபதிகள் விடுமுறையில் சென்றுள்ளனர். அவர்கள் வந்த பிறகு நான் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்வேன் என்றார்.


Click it and Unblock the Notifications











