குழந்தைகள் கண் முன்னால் தாக்கப்பட்ட குஷ்பு...மற்றவர்களுக்கு சொன்ன பாடம் என்ன?
சென்னை : கன்னத்தில் கைரேகை பதிந்த படி, கன்னம் சிவந்த நிலையில் குஷ்பு தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த போட்டோ அனைவரையும் அதிரவை வைத்தது. ஆனால் அதற்கு பின்னால் இருக்கும் விழிப்புணர்வு புரிந்ததும் இதற்கு ஆதரவு பெருகி வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் பிசியாக இருந்த குஷ்பு, மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். சினிமாவை தொடர்ந்து நீண்ட இடைவேளைக்கு பிறகு சின்னத்திரையிலும் ரீஎன்ட்ரி கொடுத்தார் குஷ்பு. நடிகை, தயாரிப்பாளர் என்பதை தாண்டி தற்போது எழுத்தாளராகவும் குஷ்பு அவதாரம் எடுத்துள்ளார்.

கன்னத்தில் காயத்துடன் குஷ்பு
கலர்ஸ் தமிழ் சேனலில் குஷ்பு புதிய சீரியல் ஒன்றிற்கு கதை எழுதி உள்ளார். இந்த சீரியலில் டைட்டில் ரோலான மீரா கேரக்டரில் அவரே லீட் ரோலிலும் நடிக்கிறார். இந்த சீரியலின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் கன்னடத்தில் காயத்துடன் இன்ஸ்டாகிராமில் போட்டோ ஒன்றை பதிவிட்டார் குஷ்பு. இதை பார்த்து அனைவரும் பதறி போயினர். அந்த போட்டோவுடன், Say no to Violence, stand with me, speak up now, meera என்று கேப்ஷன் பதிவிட்டிருந்தார்.

எதற்கும் இந்த ப்ரோமோ
இது பற்றி விசாரித்த போது, அது அவர் நடிக்கும் மீரா சீரியலுக்கான ப்ரோமோ என விளக்கம் அளிக்கப்பட்டது. முதலில் இதை வழக்கமான சீரியல் பரபரப்பிற்கான ப்ரோமோ என்று தான் அனைவரும் நினைத்தனர். ஆனால் இதைத் தொடர்ந்து வீடியோ ஒன்றையும் பகிர்ந்தார் குஷ்பு. அதில் இரண்டு குழந்தைகள், கணவரான சுரேஷ் மேனனுக்கு உணவு பரிமாறுகிறார் குஷ்பு. டைனிங் டேபிளில் மொபைல் போனை பார்த்துக் கொண்டிருக்குமண கணவரிடம், எங்களுடன் இருக்கும் நேரம் குறைவு. அதிலும் போனா...ஹாஸ்பிடளிலில் ஏதாவது பிரச்சனை என்னிடம் சொல்லுங்கள். நானும் டாக்டர் தான் என்கிறார்.

மிஸ்ட் காலில் விழிப்புணர்வு
எல்லாவற்றையும் உன்னிடம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது என குழந்தைகள் முன் அவமதிக்கும் கணவரின் கைகளில் இருக்கும் மொபைலை குஷ்பு, பறிக்க முயற்சிக்கும் போது, அவர் குஷ்புவை கன்னத்தில் ஓங்கி அறைகிறார். குழந்தைகள் கண் முன்னே கணவர் தன்னை அடித்தது தவறு. இதை பார்க்கும் என் மகளுக்கு நாளை அவளும் இப்படி தான் அடங்கி போக வேண்டும் என தோன்றும். என் மகனுக்கு மற்றொரு பெண்ணை சாதாரணமாக நினைக்க தோன்றும். எனது முடிவு சரி என்றால் கீழே தோன்றும் 7095511111 என்ற எண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுங்கள் என கண்ணீருடன் கேட்கிறார்.

அட நல்ல முயற்சியா இருக்கே
குடும்ப வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வை உருவாக்க கலர்ஸ் தமிழ் சேனல் மற்றும் குஷ்பு இணைந்து இந்த ப்ரோமோவை உருவாக்கி உள்ளனர். சீரியல் ப்ரோமோவை வைத்தே விழிப்புணர்வை தரும் குஷ்புவிற்கு ஆதரவும், பாராட்டும் பெருகி வருகிறது. சர்வதேச பெண்கள் தினத்தை ஒட்டி மிஸ்ட் கால் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டத்தை கலர்ஸ் தமிழ் சேனல் முன்னெடுத்துள்ளது. குஷ்புவின் இந்த ப்ரோமோ வீடியோ வைரலாகி, மிஸ்ட் கால்களும் குவிந்து வருவதாக கலர்ஸ் தமிழ் சேனல் சார்பில் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











