»   »  திரிஷா 'அம்மா'- குஷ்பு நோ!

திரிஷா 'அம்மா'- குஷ்பு நோ!

Subscribe to Oneindia Tamil


திரிஷாவின் அம்மா வேடத்தில் நடிக்க வந்த வாய்ப்பை வேண்டாம் என்று கூறி விட்டாராம் குஷ்பு.

Click here for more images

ஹீரோயினாக கலக்கிய குஷ்பு பின்னர், அந்த வாய்ப்புகள் குறைந்தபோது நடுவாந்திரமான ரோல்களுக்கு மாறினார். இப்போதெல்லாம் அவரைத் தேடி அம்மா கேரக்டருக்கான வாய்ப்புகள்தான் அதிகம் வருகின்றன.

சிபிராஜுக்கு அம்மாவாக நடித்தார். பெரியார் படத்தில் மணியம்மை வேடத்தில் நடித்தார். அக்கா, அண்ணி ரோல்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில், திரிஷாவுக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்று கேட்டு அவரை அணுகியுள்ளார் பிரகாஷ் ராஜ். அவரும், மோசர்பெயர் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் அபியும் நானும் படத்தில் திரிஷாதான் நாயகி. ராதாமோகன் இப்படத்தை இயக்குகிறார்.

படத்தின் ஷூட்டிங் வருகிற 15ம் தேதி மூணாரில் தொடங்குகிறது. இதில்தான் குஷ்புவை நடிக்கக் கூப்பிட்டார் பிரகாஷ் ராஜ். இப்படத்தில் திரிஷாவின் அப்பாவாக நடிக்கிறார் பிரகாஷ் ராஜ்.

படத்தில் ஹீரோயின் ரோலுக்கு நிகரானதாம் அம்மா கேரக்டர். ஆனால் எந்தக் காரணத்தையும் சொல்லாமல் இந்த வேடம் வேண்டாம் என்று கூறி விட்டாராம் குஷ்பு.

இதனால் வேறு அம்மாவைத் தேட ஆரம்பித்துள்ளார்களாம் பிரகாஷ் ராஜும், ராதா மோகனும்.

வர, வர குஷ்புவுக்கு 'அம்மா' என்றாலே பிடிக்கவில்லை போலும்!

Read more about: chances, kushboo, mother role, sibiraj

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil