»   »  குஷ்பு பண மோசடி வழக்கு:

குஷ்பு பண மோசடி வழக்கு:

Subscribe to Oneindia Tamil

உயர்நீதிமன்றம் சமரச யோசனை

ரூ. 18 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக நடிகை குஷ்பு மீது தொடரப்பட்ட வழக்கை சமரச மையத்திற்கு அனுப்புவது குறித்து அரசு வக்கீலின் கருத்தை சென்னை உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது.

நடிகை குஷ்பு மீது சமீபத்தில் மாத்யூ வர்கீஸ் என்பவர் பண மோசடி புகார் கூறினார். அதில், பெங்களூரில் குஷ்புவுக்குச் சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்பை விலைக்கு வாங்குவதற்காக குஷ்புவிடம் ரூ. 18 லட்சம் பணத்தைக் கொடுத்தேன்.

ஆனால் அவர் எனக்கு விற்காமல் வேறு ஒருவருக்கு விற்று விட்டார். பணத்தையும் அவர் திருப்பித் தரவில்லை என்று தனது புகாரில் கூறியிருந்தார் வர்கீஸ்.

இந்த நிலையில் இதுதொடர்பான புகாரை போலீஸார் பதிவு செய்ய மறுப்பதாகவும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் வர்கீஸ்.

இந்த வழக்கு இன்று நீதிபதி கே.என்.பாஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்ேபாது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமரேசன், இது சிவில் வழக்கு. கிரிமினல் வழக்காக இதை பதிவு செய்ய முடியாது என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி பாஷா, 2002ம் ஆண்டில் விற்பனை தொடர்பான ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதால் சிவில் வழக்கும் தொடர முடியாது என்றார்.

பின்னர் இந்த வழக்கை சமரச மையத்திற்கு அனுப்ப விரும்புகிறேன். இதுகுறித்து அரசுத் தரப்பு முடிவை அறிய விரும்புகிறேன் என்று கூறி வருகிற 9ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil