»   »  குஷ்புவின் அண்ணாமலை ஞாபகங்கள்!

குஷ்புவின் அண்ணாமலை ஞாபகங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினிகாந்துடன் இணைந்து தான் நடித்த அண்ணாமலை படம் வெளியாகி 24 ஆண்டுகள் ஆனதையொட்டி, அந்தப் படத்தைப் பற்றி ட்விட்டரில் நினைவு கூர்ந்துள்ளார் நடிகை குஷ்பு.

அண்ணாமலை படம் ரஜினியின் திரையுலகப் பயணத்தில் மிக முக்கியமானது. இந்தப் படத்தை அன்றைய குடியரசுத் தலைவராக இருந்த ஷங்கர் தயாள் சர்மா பார்த்துப் பாராட்டியுள்ளார்.

அதிக வசூல்

அதிக வசூல்

பாட்ஷாவுக்கு முன்பு வரை அண்ணாமலைதான் ரஜினியின் திரைப் பயணத்தில் அதிக வசூலைக் குவித்த படம்.

குஷ்பு

இந்தப் படம் குறித்து ட்விட்டரில் நினைவு கூர்ந்துள்ள குஷ்பு, "இந்தப் படத்தில் நான் நடிப்பேன், அதுவும் தனி நாயகியாக சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிப்பேன் என்று முதலில் நம்பவே இல்லை. எனது திரையுலக வாழ்க்கையில் மிகச் சிறந்த படமாக அமைந்தது அண்ணாமலை.

இந்த வாய்ப்பைத் தந்த கவிதாலயா, இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா... எல்லாருக்கும் மேலாக சூப்பர் ஸ்டார் அனைவருக்கும் நன்றி.

ரஜினியின் பெரிய மனசு

ரஜினியின் பெரிய மனசு

ரஜினி மாதிரி ஒரு அந்தஸ்தில் இருக்கும் வேறு எந்த நடிகரும் ஒரு ஹீரோயின் பெயர் பாட்டில் இடம் பெறுவதை அனுமதித்திருக்க மாட்டார்கள் (கொண்டையில் தாழம்பூ..) இன்று நான் எங்கே போனாலும் என் பின்னால் தொடர்கிறது அந்தப் பாடல். நன்றி ரஜினி சார்...

ஒன் அன்ட் ஒன்லி...

ஒன் அன்ட் ஒன்லி...

எளிமை, கடும் உழைப்பு, மிக இயல்பான தன்மை, நேரம் தவறாமை, யாருடனும் ஈகோ பார்க்காமை... இப்படி நிறையக் கற்றுக் கொண்டேன், தி ஒன் அன்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் ரஜினியிடமிருந்து..." என்று குறிப்பிட்டுள்ளார் குஷ்பு.

English summary
Actress Kushbu remembered 24 years of Rajinikanth's Annamalai in twitter.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil