மகளின் முக்கியமான ஃபோட்டோவை வெளியிட்ட குஷ்பு...அப்படி என்ன ஃபோட்டோ
சென்னை : 1980- 90 களில் தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக வலம் வந்தவர் குஷ்பு. 1988 ம் ஆண்டு எஸ்.பி.முத்துராமன் இயக்கிய தர்மத்தின் தலைவன் படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் பிரபுவுடன் இணைந்து நடித்தவர்.
நடிக்க வந்த மிக குறுகிய காலத்திலேயே புகழின் உச்சிக்கு சென்றவர். தென்னிந்திய சினிமாவின் டாப் ஹீரோயினாக இருந்த இவர் ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ், சரத்குமார், விஜயகாந்த் என டாப் ஹீரோக்கள் அனைவருடனும் இணைந்து நடித்தார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
பிரபலமாக இருந்த காலத்தில் அதிகமாக காதல் கிசுகிசுக்களில் அடிப்பட்ட குஷ்புவிற்கு அவரது ரசிகர்கள் கோயில் கட்டும் அளவிற்கு சென்றனர். அந்த அளவிற்கு சினிமா ரசிகர்களின் மனதில் அழுத்தமான இடம் பிடித்தார் குஷ்பு.

சுந்தர்.சி உடன் காதல்
முறைமாமன் படத்தில் நடிக்கும் போது டைரக்டர் சுந்தர்.சிக்கும் குஷ்புவிற்கும் இடையே காதல் மலர்ந்தது. ஆனால் அந்த தகவலை அவர்கள் மறுத்து வந்த நிலையில் 2000 ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அவந்திகா, அனந்திகா என இரு மகள்கள் உள்ளனர்.

மகளின் பட்டமளிப்பு ஃபோட்டோக்கள்
இதில் அனந்திகா சமீபத்தில் தான் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். அவரின் பட்டமளிப்பு விழா ஃபோட்டோக்களை தான் ஒரு அம்மாவாக பெருமையுடன் சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார் குஷ்பு. தற்போது கொரோனா காலம் என்பதால் ஆன்லைனிலேயே பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டுள்ளது.

அம்மாவாக பெருமை
ட்விட்டரில் பொம்மாயி குட்டி என்ற கேப்ஷனுடனும், இன்ஸ்டாகிராமில், என் பிள்ளை என் பொம்மாயி பட்டம் பெற்றுவிட்டார். அவள் என் வயிற்றில் இருந்ததை இப்போது நினைத்து பார்க்கிறேன். இன்று அவள் பெரிய பொண்ணாகி, அற்புதமான குழந்தையாக ஆகி உள்ளார். நீங்கள் எங்களை பெருமைப்படுத்தி விட்டாய். நீ ஒரு புதிய உலகிற்குள் அடியெடுத்து வைக்கிறாய். ஆனால் நீ வலிமையான, நம்பிக்கையான பெண் என எங்களுக்கு தெரியும் என உணர்ச்சிகரமாக மிக நீண்ட கேப்ஷனை பதிவிட்டுள்ளார்.

சின்னத்திரையில் ரீ என்ட்ரி
அரசியல் வேலைகளால் சில காலம் சினிமாவிற்கு பிரேக் விட்டிருந்த குஷ்பு, தற்போது மீண்டும் நடிப்பில் தீவிரம் காட்டி வருகிறார். ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தில் முக்கிய ரோலில் குஷ்பு நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து மீண்டும் சின்னத்திரையிலும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். கோகுலத்தில் சீதை சீரியலில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள குஷ்பு, கலர்ஸ் தமிழ் சேனலில் டான்ஸ் வேர்சஸ் டான்ஸ் என்ற ரியாலிட்டி ஷோவில் நடுவராகவும் பங்கேற்க உள்ளார்.

ஸ்லிம்மான குஷ்பு
சுந்தர்.சி இயக்கும் அரண்மனை 3 படத்தில் நடித்து வரும் குஷ்புவிடம் மேலும் சில படங்களில் நடிக்க பேசப்பட்டு வருகிறதாம். சமீபத்தில் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகி உள்ள குஷ்பு, விரைவில் சின்னத்திரையிலும் தான் தயாரிக்கும் ஒரு மெகா சீரியலிலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











