»   »  அலுவலகம், கல்லூரி செல்லும் பெண்களே! டாப்ஸியின் இந்த வீடியோவை முதலில் பாருங்க

அலுவலகம், கல்லூரி செல்லும் பெண்களே! டாப்ஸியின் இந்த வீடியோவை முதலில் பாருங்க

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பெண்களுக்கு தற்போது மிகவும் தேவையான தற்காப்பு கலையின் ஒரு பகுதியை கற்றுக் கொடுத்துள்ளார் நடிகை டாப்ஸி.

கோலிவுட், டோலிவுட், பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார் டாப்ஸி. பாலிவுட்டில் அவருக்கு வித்தியாசமான கதாபாத்திரங்கள் கிடைக்கின்றது. அதில் அவர் அருமையாக நடித்து நல்ல பெயர் எடுத்து வருகிறார்.

டாப்ஸி தற்போது நாம் ஷபானா உள்பட 3 இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

நாம் ஷபானா

நாம் ஷபானா

நாம் ஷபானா படத்தில் டாப்ஸி ஷபானா கான் என்ற தற்காப்பு கலை கலைஞராக நடித்து வருகிறார். இந்த படத்தில் பாலிவுட்டின் முன்னணி ஹீரோவான அக்ஷய் குமாரும் உள்ளார்.

டாப்ஸி

பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு அதிக அளவில் ஆளாகி வரும் இந்நேரத்தில் தற்காப்பு கலை பற்றி பேசியுள்ளார் டாப்ஸி. மேலும் இது குறித்த வீடியோவை அக்ஷய் குமார் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அடி

அடி

பெண்கள் தங்களை யாராவது மார்பு பகுதியிலோ, பின் பகுதியிலோ தொட்டால் அவரை அடித்து நொறுக்காமல் மாறாக பயத்தில் உறைந்துவிடுகிறார்கள். அப்படி இருக்கக் கூடாது என்கிறார் டாப்ஸி

அக்கி

அக்கி

யாராவது கண்ட இடத்தில் தொட்டால் அவர்களை எப்படி அடித்து கீழே தள்ளுவது என்பதை அக்ஷய் குமாரை தாக்கி வீடியோ மூலம் தெரிவித்துள்ளார் டாப்ஸி. பயனுள்ள வீடியோ அனைவரும் கண்டிப்பாக பார்க்கவும், பகிரவும்.

English summary
Bollywood actor Akshay Kumar has released a video on twitter in which Taapsee is teaching Kohni Maar, a selfe defence technique for women.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil