»   »  கிண்டல், நக்கல், பொறாமையை தாண்டி வந்த 'லேடி ரஜினி'

கிண்டல், நக்கல், பொறாமையை தாண்டி வந்த 'லேடி ரஜினி'

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: லேடி ரஜினியா அது யாரு என்று நீங்கள் கேட்டால் பதில் சோனாக்ஷி சின்ஹா என்பது தான். இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் சோனாக்ஷியை மும்பையின் லேடி ரஜினி என்று அழைத்ததை மறந்திருக்க மாட்டீர்கள்.

புஸு புஸுன்னு குண்டாக இருந்த சோனாக்ஷி சின்ஹாவை உடல் மெலிய வைத்து தனது தபாங் படம் மூலம் ஹீரோயின் ஆக்கிய பெருமை சல்மான் கானை சேரும். தபாங் படத்தை அடுத்து சோனாக்ஷி பாலிவுட்டின் சீனியர் ஹீரோக்களோடு ஜோடி சேர்ந்தார்.

வந்த வேகத்தில் வளர்ந்த சோனாக்ஷியை பார்த்து பலரும் பொறாமைப்பட்டனர்.

கிண்டல்

கிண்டல்

வெற்றிப் படங்களாக கொடுத்த சோனாக்ஷியின் பெரிய நெற்றி மற்றும் பூசினாற் போன்ற உடல் வாகை பலரும் கிண்டல் செய்தனர். பென்சில் போன்று குச்சியாக இருக்கும் பாலிவுட் நடிகைகள் மத்தியில் பூசினாற் போன்று இருக்கும் சோனாக்ஷி குண்டாக தெரிந்தார்.

போடா போடா

போடா போடா

சோனாக்ஷியை ஜாடைமாடையாகவும், சமூக வலைதளங்களிலும் பலர் கிண்டல் செய்தனர், செய்து வருகின்றனர். கிண்டல் செய்பவர்கள் செய்யட்டும் எனக்கென்ன என்று சோனாக்ஷி தனது வேலையில் மட்டும் கவனம் செலுத்துகிறார்.

சீனியர்ஸ்

சீனியர்ஸ்

ஆன்ட்டி போன்று இருப்பதால் தான் சோனாக்ஷி சீனியர் ஹீரோக்களுடன் மட்டும் ஜோடி சேர்கிறார் என்று விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் தான் அவர் ரன்வீர் சிங், ஷாஹித் கபூர் ஆகியோருடன் நடித்து தன்னால் இளம் ஹீரோக்களுடனும் நடிக்க முடியும் என்பதை காட்டினார்.

ரஜினி

ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமா உலகில் பெருந்தலை என்பது பாலிவுட்டுக்கும் தெரிந்து தான் உள்ளது. அதனால் அவருடன் ஜோடி சேர பாலிவுட் நடிகைகள் விரும்புகையில் அந்த வாய்ப்பு சோனாக்ஷி சின்ஹாவுக்கு கிடைத்தது.

அப்பா வயசு

அப்பா வயசு

அப்பாவின் நண்பர், தந்தை வயதில் உள்ளவருடனா ஜோடி போடுவது என்று பலர் சோனாக்ஷியை விமர்சித்தினர். அவரோ நான் சூப்பர் ஸ்டார் ஹீரோயினாக்கும் என்று பெருமையாகக் கூறி விமர்சகர்களை வாயடைத்துப்போக வைத்தார். அத்தகைய தில்லான பெண் சோனாக்ஷி இன்று தனது 28வது பிறந்தநாளை கொண்டாடினார்.

English summary
Birthday girl Sonakshi Sinha has come a long way in Bollywood. Her journey in film industry is not an easy one.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil