»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

நீண்ட நாட்களுக்கு பின் முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்க வேகமாகத் தயாராகிக் கொண்டிருக்கும் படம்முள்ளில் ரேஜா.

காலமும், காதலும் புறக்கணித்த ஒரு இளைஞனின் கதையாம். தேனி மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் நடந்தஉண்மை சம்பவத்தையே படமாக்குகிறார்களாம். மிராசுதாரரின் மகளுக்கும் ஒரு சாதாரண இளைஞருக்கும்ஏற்பட்ட காதல், அதனால் ஏற்பட்ட மோதல்கள் தான் கதையாம்.

சமீப காலமாக சிட்டி பேஸ்ட் கதைகளே தமிழில் எடுபட்டுக் கொண்டிருக்க முழுவதும் கிராமப் பின்னணியில்உருவாக்கப்படுகிறது இந்தப் படம்.

படப் பிடிப்பு தேனி, மரக்காணம் ஆகிய பகுதிகளில் தான் நடந்து வருகிறது.

இதில் அறிமுகமாகும் லஹரி கருப்பாக இருந்தாலும், பார்க்கவே குளுகுளுவென இருக்கிறார். ஆந்திராவில்இருந்து அழைத்து வந்திருக்கிறார்கள்.

மிராசுதாரரின் மகளாக நடிக்கும் இவர் ஏகத்துக்கும் கவர்ச்சி காட்டிவருகிறார். கேட்டால், படத்துக்கு தேவைப்படுவதால் காட்டுகிறேன், இது தப்பா என்று முறைக்கிறார்.

இதில் விஷ்ணு என்ற ஹீரோவையும் அறிமுகப்படுத்துகிறார்கள். படத்தில் பறவை முனியம்மாவுக்கும் ஒரு முக்கியகேரக்டரில் நடிக்கிறார்.

படத்தை இயக்குவது கஸ்தூரிபாண்டியன். நடிகர் தனுசின் உறவினராம் இவர்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil