»   »  சோப்பு போடும் லைலா

சோப்பு போடும் லைலா

Subscribe to Oneindia Tamil

தமிழில் வாய்ப்புகள் ஏதும் இல்லாததால் கன்னட முன்னணி நடிகர்களுக்கு ஐஸ் வைத்து வாய்ப்பு தேடும் முயற்சியில் இறங்கியுள்ளார்நடிகை லைலா.

பிதாமகனில் லைலா பேசப்பட்டாலும் கூட அதற்குப் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் சுத்தமாக இல்லை.

அர்ஜூனுடன் நடித்த ஜெயசூர்யா கிட்டத்தட்ட முடிந்த நிலையில், ஆச்சார்யா என்ற ஒரு படம் தான் லைலா கையில் இருக்கிறது.

அந்தப் படமும் பதவி பறிபோன அமைச்சர் போல சத்தமே இல்லாமல் உள்ளது. இதனால் வெறுத்துப் போன லைலா தனது சம்பளத்தைகுண்டக்க மண்டக்க குறைத்து கூவிக் கூவி வாய்ப்பு கேட்கத் தொடங்கினார்.

இதனால் தெலுங்கில் மிஸ்டர் அன்ட் மிஸஸ் சைலஜா கிருஷ்ணமூர்த்தி என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படம் வெளி வந்தவேகத்தில் வாலை சுருட்டிக் கொண்டு டப்பாவுக்குள் போய் விட்டது. இதனால் அங்கும் புதிய வாய்ப்புக்கள் இல்லை.


இதனால் நொந்து போன லைலா தனது சம்பளத்தை ரொம்பவே அதாவது ரூ. 2 லட்சம் என்று குறைத்து விட்டாராம். இப்போதாவதுவாய்ப்பு தாருங்களேன் என்று தயாரிப்பாளர்களுக்கு போன் போட்டு நச்சரித்து வருகிறாராம்.

இருப்பினும் பலன் இல்லை. இதனையடுத்து, கோலிவுட்டில் முன்னாள் நடிகைகள் ஆகும் பெண்மணிகளின் கடைசிப் புகலிடமான கர்நாடகதிரையுலகை லைலாவும் தஞ்சமடைந்துள்ளார்.

அதாவது பரவாயில்லை. தன்னை ஏற்றி வைத்த தமிழ் சினிமாவை மறந்து, அசல் கன்னட நடிகையாகவே மாறி, பிற மொழிப் படங்களுக்குகர்நாடகாவில் தடை விதித்தது சரிதான் என்று குரல் கொடுக்கிறார்.

பெங்களூரில் நிருபர்களுக்குப் பேட்டியளித்த அவர் இது குறித்து கூறுகையில்,

கன்னட சினிமா மோசமான நிலையில் இருக்கிறது. கர்நாடகாவில் திரையுலக வளர்ச்சிக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியஅவசியம் ஏற்பட்டுள்ளது.

எனவே தமிழ் உள்ளிட்ட பிற மொழிப் படங்கள் அந்த மாநிலங்களில் வெளியாகி 3 மாதங்கள் கழித்துத்தான் தமிழில் வெளியாகவேண்டுமென விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனை சரிதான் என்றார்.


வாசகர்களுக்கு ஒரு குறிப்பு. லைலா இப்போது கன்னடத்தில் 3 படங்களில் நடித்து வருகிறார். இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும், ஆடுஏன் அம்மணமாகப் போகிறது என்று.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil