»   »  இந்திக்கு போன லைலா

இந்திக்கு போன லைலா

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழிலில் பிதாமகனுக்குப் பிறகு பெரிய வாய்ப்புகள் இல்லாததாலும் (பாலாவுக்கு கல்யாணம் ஆகி விட்டதாலும்!?)இந்திக்குப் போயுள்ளார் லைலா.

கள்ளழகர் படத்தில் அறிமுகமாகி லைலா தொடர்ந்து பல படங்களில் வெறும் அழகு பொம்மையாகவே ஒரு ரவுண்டு வந்தார்.பின்னர் பாலாவின் அறிமுகத்தால் இரண்டு அட்டகாசமான படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

பாலாவின் படங்களில் நடிக்க ஆரம்பித்த பின், சும்மா மரத்தைச் ற்றி டூயட் பாடி ஆடும் கதாநாயகி வாய்ப்புகளைக் குறைத்துக்கொண்டார். இதனால், லைலாவுக்கும் பாலாவுக்கும் காதல்; அதனால்தான் வெளி இயக்குநர்களின் படங்களில் அதிகம் நடிப்பதில்லைஎன்று வதந்தி பரவியது.

ஆனால் லைலா அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், பிதாமகன் படத்துக்கு 6 மாதம் கால்ஷீட் ஒதுக்கினார்.பிதாமகனில் அவரது நடிப்பும் பரவலாக பேசப்பட்ட நிலையில் தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் வரும் என லைலா நினைத்தார்.ஆனால் சுத்தமாக ஒன்றும் வரவில்லை.

தமிழில் லைலாவுக்கு ஜெய்சூர்யா, ஆச்சார்யா என்ற இரண்டு படங்கள் மட்டுமே உள்ளன. ஏறக்குறைய இரண்டு வருடங்களாகஅவரது கால்ஷீட் டைரியில் இடம் பெற்றிருந்த உள்ளம் கேட்குமே படம் இன்றுதான் ரிலீஸ் ஆனது.

ஜெய்சூர்யா, ஆச்சார்யா படங்களை நம்பி சென்னையில் குப்பை கொட்ட முடியாது என்பதால் மும்பைக்குப் பொட்டியைக் கட்டினார் லைலா.அங்கு அவருக்கு இரண்டு இந்திப் படங்கள் புக் ஆகியுள்ளன. இரண்டும் இந்தியில் பிரபலமான இயக்குநர்களான ராஜ்குமார் சந்தோஷிமற்றும் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் படங்களாகும்.

இதனால் கொஞ்சம் உற்சாகமாக இருக்கிறாராம் லைலா. அதோடு, இந்தி ரசிகர்களுக்கு ஸ்லிம்மாக, டான்ஸ் நன்றாக ஆடும்நடிகைகளைத் தான் பிடிக்கும். எனக்கு ஸ்லிம் பாடி. பாலே நடனம் வேறு தெரியும். இனி இந்தியில் நான்தான் நம்பர் ஒன் என்று கூறிவருகிறாராம்.

மேலும் தன்னைப் பேட்டி எடுக்க வரும் இந்தி பத்திரிக்கை நிருபர்களிடம், எனக்கு இந்தி ரசிகர்களை ரொம்பப் பிடிக்கும், ஐ லவ்இந்தி, தமிழில் வாய்பில்லாததால் தான் இந்திக்கு வந்தேன் என்று சொல்வது பொய், நடிகையாகி இருக்காவிட்டால் டாக்டராகிஇருப்பேன் என்று பேசுவதற்கு ட்ரெயினிங் எடுத்து வருகிறாராம்.

இந்த இரண்டு படங்கள் ஹிட் ஆவதைப் பொருத்து இந்தியில் நீடிப்பதா, அல்லது மலையாளம், கன்னடப் பக்கம் போய் வாய்ப்புவேட்டையாடுவதா என்பதை முடிவு செய்யப் போகிறாராம் லைலா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil