»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லைலா புலம்பிக் கொண்டிருக்கிறார். எதற்காக? தொடர்ந்து படியுங்களேன்...

உன்னை நினைத்து படம் வரட்டும், எனது ரேஞ்சே மாறப் போகிறது என்று கண்ணில் படுபவர்களிடம் எல்லாம் பெருமையாகக் கூறிக் கொண்டிருந்தார்லைலா.

அப்படி என்னதான் அந்தப் படத்தில் இருக்கிறது என்று எதிர்பார்த்தவர்கள் படத்தைப் பார்த்ததும் ஆச்சரியப்பட்டார்கள். நம்ம லைலாவா இப்படி நடித்திருப்பதுஎன்று.

இதில் காதலியையே (லைலா) வில்லியாகக் காட்டியிருக்கிறார் இயக்குனர் விக்ரமன்.

இதையடுத்து பலரும் லைலாவிடம் துக்கம் விசாரிப்பது மாதிரி என்ன இது உங்களை வில்லி கேரக்டரில் போட்டுவிட்டார்கள்என்று நேரடியாகவே கேட்டுவிட்டார்கள்.

சக நடிகைகள் பலரும் போன் செய்து இனி இப்படிப்பட்ட வில்லி வேடங்கள் தான் கிடைக்கும் என்றும்கூறினார்களாம். இதனால் பயந்து போன லைலா இப்போது ஏன் தான் அந்தப் படத்தில் நடித்தோமோ என்றுபுலம்பிக் கொண்டிருக்கிறாராம்.

விக்ரமன் தனது இமேஜையே மாற்றப்போகிறார் என்று பெருமிதமாக கூறி வந்த லைலா இப்போது விக்ரமனைதிட்டிக் கொண்டிருக்கிறாராம்.

லைலாவை வாரும் விக்ரமன்:

அதே நேரத்தில் உன்னை நினைத்து படத்தில் தனக்கு மிகவும் பிடித்த கேரக்டர்களாக சூர்யாவையும்,சினேகாவையும் மட்டுமே கூறி வருகிறார் படத்தின் டைரக்டர் விக்ரமன்.

அப்ப லைலா?

இன்னொரு விஷயம்.. படம் நன்றாகப் போவதால் சூர்யா தனது சம்பளத்தை குண்டக்க மண்டக்க உயர்த்திவிட்டார்என்கிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil