»   »  விளம்பரத்துக்கு வந்த லைலா

விளம்பரத்துக்கு வந்த லைலா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில் விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார் லைலா.அதே நேரத்தில் சினிமாவிலும் தனது சம்பளத்தை பெரிய அளவில் குறைத்துள்ளார்.

அப்படி இருந்தும் பட வாய்ப்புகள் ஏதும் பெரிதாக இல்லை. அர்ஜூனுடன் ரொம்ப நாளாக நடிக்கும் ஜெய்சூர்யா,பாலாவின் உதவியாளர் இயக்கும் ஆச்சார்யா ஆகிய படங்களைத் தவிர வேறு படங்கள் இல்லை.

இந்தியில் வாய்ப்பு தேடலாம் என்று போனவர், இப்போது சுவரில் அடித்த பந்தாக திரும்பி வந்திருக்கிறார்.காரணம் பிபாஷா, மல்லிகா, தியா மிர்ஷா, செலீனா ஜெட்லி உள்ளிட்ட தாரகைகள் புகுந்து விளையாடும் கவர்ச்சிப்போர்க் களத்தில் எழும் புழுதியில் சில்வண்டான லைலாவின் வருகை யாருக்கும் தெரியவில்லை.

அதனால் கோலிவுட்டிற்கே மீண்டும் திரும்பிவிட்டார். இப்போது ஜெயசூர்யாவின் இறுதி கட்ட படப்பிடிப்பிலும்,ஆச்சார்யாவிலும் கவனம் செலுத்தி வருகிறார். தெலுங்கில் புகழ் பெற்ற இயக்குநர் சத்யநாராயணா இயக்கத்தில்ஒரு படம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அதே நேரத்தில் தனது சம்பளத்தையும் அதிரடியாக 25 லட்சத்திலிருந்து 15 லட்சத்திற்குக் குறைத்திருக்கிறார்.

இடையே, கண் திருஷ்டி பட்டதால்தான் வாய்ப்புகள் ஏதும் வரவில்லை என்று யாரோ ஒரு புண்ணியவான் லைலாகாதில் ஓத, லைலாவும் அதை நம்பியவராக ஒரு மந்திரவாதியைப் பார்த்திருக்கிறார். மந்திரவாதி பரிகாரம் என்றுகூறி ஒரு தாயத்தைக் கொடுத்து விட்டு, கணிசமாக ஒரு அமெளண்ட்டை தேத்தி விட்டார்.

அந்த தாயத்தை இடுப்பில் கட்டிக் கொண்டு, வாய்ப்புகள் வருமா என்று வாசப்படியைப் பார்த்தபடிஉட்கார்ந்திருக்கிறார். அவரைச் சந்திக்கப் போனபோது சுற்றிலும் ஏகப்பட்ட கடிதங்கள்.

அத்தனையும் பிதாமகன் படத்தில் என் நடிப்பைப் பாராட்டி வந்த கடிதங்கள் என்று கூறும் லைலா, ரோஜாவனம்,தினா, அள்ளித் தந்த வானம் ஆகிய படங்களில் எல்லாம் என்னுடைய கேரக்டர்கள் நன்றாகத்தான் இருந்தன.ஆனால் பிதாமகன் அளவுக்கு என் நடிப்புத் திறமை முழுமையாக அந்தப் படங்களில் வெளிக்கொண்டுவரப்படவில்லை.

நான் ஒன்றும் பெரிய நடிகையில்லை. ஆனால் பாலா போன்ற ஒரு சிறந்த டைரக்டர் என்னைப் போல சாதாரணநடிகையைக்கூட நன்றாக நடிக்க முடியும் என்றவரிடம், தடாலடி சம்பளக் குறைப்பு, விளம்பரப் படங்களில்நடிப்பது குறித்துக் கேட்டபோது,

காசு, பணம் பற்றி கவலையில்லை என்று கூறுமளவுக்கு நான் முட்டாளல்ல. அதே நேரத்தில் நடிப்பதற்குத்தான்நாங்கள் சினிமாவில் இருக்கிறோம். சினிமாவினால்தான் கிடைக்கும் புகழைப் பயன்படுத்தி விளம்பரப் படங்களில்நடிக்கிறோம். விளம்பரப் படங்களில் நடித்து சம்பாத்தியத்தை பெருக்கிக் கொள்வதில் என்ன தவறு? என்று எதிர்க்கேள்வி போட்டார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil