»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கிட்டதட்ட எல்லா நடிகர்களும் போலீஸ் வேஷம் கட்டி ஒரு ரவுண்ட் வந்துவிட்ட நிலையில் கம்பீரம் என்றபடத்தில் அசிஸ்டெண்ட் கமிஷ்னர் முத்துசாமி என்ற கேரக்டரில் நடிக்கிறார் சரத்குமார்.

அதில் இவருக்கு ஜோடியாக மலையாளத்தில் இருந்து வந்துள்ள பிரணதியும் லைலாவும் நடிக்கின்றனராம்.

பிதாமகனுக்குப் பின் லைலாவுக்கு ஏகப்பட்ட வாய்ப்புக்கள் குவிந்தாலும் அவர் தேர்வு செய்து, ஒப்புக்கொண்டுள்ள ஒரே படம் கம்பீரம் தான். இதில் அவருக்கு பெண் போலீஸ் வேஷம் என்கிறார்கள். இதைமுடித்துவிட்டுத் தான் பிற வாய்ப்புக்கள் பக்கம் திரும்புவாராம் லைலா.

இதற்கிடையே பிதாமகனை தேசிய விருதுக்கு அனுப்பும் முயற்சிகளும் ஆரம்பித்துள்ளன. விக்ரமோடு,லைலாவுக்கும் சிறந்த நடிகை விருது கிடைக்கும் என்று கருதுகிறாராம் இயக்குனர் பாலா.

ஆனால், கேரக்டர்கள் சொந்தக் குரலில் பேசினால் தான் விருது கிடைக்கும் என்பதால் லைலாவை சொந்த குரலில்பேச வைத்து படத்தில் அவரது போர்ஸனை மட்டும் மீண்டும் டப்பிங் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம்.

இதனால் முதலில் லைலாவை தமிழில் நன்றாகப் பேச வைக்க பயிற்சி தரப்பட்டு வருகிறதாம். அவர் தேறியவுடன்டப்பிங் ஆரம்பித்துவிடும். லைலாவின் சொந்தக் குரலுடன் கூடிய பிரிண்ட் தேசிய விருது போட்டிக்கு அனுப்பிவைக்கப்படும்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil