»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil


பாண்டியராஜன் நடித்து, இயக்கி அறிமுகமான ஆண் பாவம் படம், கன்னடத்தில் ரீமேக் செய்யப்படுகிறது.

பாண்டியன், பாண்டியராஜன் ஆகியோர் நடித்து காமெடியில் கலக்கிய படம் ஆண் பாவம்.

சீதாவின் முதல் படமும்கூட. இந்தப் படம் இப்போது கன்னடத்தில் ரீமேக்செய்யப்படவுள்ளது.

ராமகிருஷ்ணா என்று இந்தப் படத்திற்குப் பெயர் சூட்டியுள்ளனர். ஷகீலா ரேஞ்சுக்கு கன்னடப் படங்களைத் தரும்ரவிச்சந்திரன் தான் இந்தப் படத்தில் பாண்டியன் வேடத்தில் நடிக்கிறார்.

பாண்டிராஜன் வேடத்தில் ஜக்கேஷ்நடிக்கிறார்.

ரேவதியின் வேடத்தில் காவேரியும், சீதாவின் வேடத்தில் லைலாவும் நடிக்கிறார்கள்.

தமிழில் ஹிட்டான கதைகளை கன்னட சினிமாவினர் சுட்டு படமெடுப்பது வழக்கமானது தான். ஆனால்,சமீப காலமாக அது மிகவும அதிகரித்துவிட்டது.

எம்.ஆர்.ராதாவின் முத்திரைப் படமான ரத்தக் கண்ணீரில் தொடங்கி, தங்கப்பதக்கம், நாட்டாமை, பாட்ஷா,அண்ணாமலை, சூர்யவம்சம், சேது, வாலி, தளபதி, சிப்பிக்குள் முத்து, மாப்பிள்ளை என்று தமிழில் ஹிட் ஆனஅந்தகால, இந்தகாலப் படங்களை எல்லாம் இப்போது ரீமேக் செய்து வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வரிசையில்தான் நீண்ட காலத்திற்கு முன் வெளியான ஆண் பாவமும் இப்போது கன்னடத்திற்குப் போகிறது.

ரீமேக் படங்களை அனுமதிக்கக் கூடாது என கன்னடத்தில் ஆங்காங்கே சிலர் கொடி தூக்கினாலும், தமிழில்இருந்து படங்களையும் பாடல்களையும் சுடாவிட்டால் கன்னட சினிமா திக்குத் திணறிப் போய்விடும் என்பது தான்இப்போதைய நிலை.

இளையராஜாவின் இனிய மெட்டுக்கள் அனைத்தையும் கன்னடத்தில் கேட்க முடியும். அந்த அளவுக்கு கர்நாடகத்திரையுலகினர் நோகாமல் நொங்கு தின்கிறார்கள் !

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil