»   »  என்னால் எப்படி பிரபாஸுக்கு அம்மாவாக நடிக்க முடியும்?: நடிகை பேட்டி

என்னால் எப்படி பிரபாஸுக்கு அம்மாவாக நடிக்க முடியும்?: நடிகை பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பாகுபலி படத்தில் சிவகாமியாக நடித்திருந்தால் பிரபாஸுக்கு அம்மா அல்ல வேற ஃபீலிங் வந்திருக்கும் என்று கூறி சிரித்துள்ளார் லட்சுமி மஞ்சு.

எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்த பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமியாக நடிக்க முதலில் தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சுவிடம் கேட்டுள்ளனர்.

ஹீரோவுக்கு அம்மாவாக நடிக்க மறுத்துவிட்டார் லட்சுமி.

வயது

வயது

தன்னை விட வெறும் 2 வயதே குறைவான பிரபாஸுக்கு எப்படி தன்னால் அம்மாவாக நடிக்க முடியும் என்று லட்சுமி மஞ்சு இயக்குனர் ராஜமவுலியிடம் கேட்டுள்ளார் என்று கூறப்பட்டது.

ரம்யா கிருஷ்ணன்

ரம்யா கிருஷ்ணன்

லட்சுமி மஞ்சு நடிக்க மறுத்த பிறகு ராஜமவுலி ஸ்ரீதேவியிடம் சிவகாமியாக நடிக்க கேட்க அவர் பெரிய தொகையை சம்பளமாக கேட்டார். அதனால் அவரை விட்டுவிட்டு ரம்யாவிடம் பேசி நடிக்க வைத்தார்.

லட்சுமி

லட்சுமி

பாகுபலி பற்றி லட்சுமி கூறும்போது. சிவகாமியாக நடிக்க என்னிடம் கேட்டது வதந்தி அல்ல அது உண்மை தான். நான் சிவகாமி கதாபாத்திரத்தை அல்ல மாறாக பிரபாஸின் அம்மாவாக நடிக்கவே மறுத்தேன் என்றார்.

அம்மா

அம்மா

நான் எப்படி பிரபாஸுக்கு அம்மாவாக நடிக்க முடியும்? நான் அவருடன் நடித்தால் நிச்சயமாக எனக்கு அம்மா ஃபீலிங் அல்ல வேறு ஃபீலிங் தான் வரும் என்று கூறி சிரித்துள்ளார் லட்சுமி மஞ்சு.

English summary
Actress Lakshmi Manchu said that she refused to act as Prabhas mother in Baahubali as she would get some other feeling and not motherly feel.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil