»   »  ”ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்” – சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கும் லட்சுமி மேனன்

”ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்” – சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கும் லட்சுமி மேனன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று வெளியான 12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வு முடிவுகளில் நடிகை லட்சுமி மேனனும் தேர்ச்சி அடைந்து விட்டார். இதனை தனது பேஸ்புக் பக்கத்திலும் அவர் தெரிவித்துள்ளார்

கஷ்டப்பட்டு படித்ததற்கு பலன் கிடைத்ததாக அவர் கூறியுள்ளார். சிபிஎஸ்இ வழியில் படித்து இந்த வெற்றி கிடைத்தது மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார்.

இந்திய அளவில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட மாணவர்களுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதன்படி கேரளாவிலும் இத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின.

படிப்பும், நடிப்பும்:

படிப்பும், நடிப்பும்:

கும்கி, சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், கொம்பன் உள்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் லட்சுமி மேனன். இவர் கேரளாவை சேர்ந்தவர். படித்துக் கொண்டே இவர் தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வந்தார்.

வணிகவியல் பாடம்:

வணிகவியல் பாடம்:

கேரள மாநிலம் கொச்சி, திருவம்குளம் பாரதிய வித்யாமந்திர் பள்ளியில் வணிகவியலை முக்கிய பாடமாக எடுத்து 12ம் வகுப்பு படித்து வந்தார் லட்சுமி மேனன். மத்திய பாடத்திட்டத்தின் கீழ் அவர் தேர்வு எழுதினார்.

தேர்வில் வெற்றி:

தேர்வில் வெற்றி:

இந்த தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. அதில் லட்சுமி மேனன் வெற்றி பெற்றார்.

தொடர்ந்து கல்லூரிப் படிப்பு:

தொடர்ந்து கல்லூரிப் படிப்பு:

இதுகுறித்து அவர், "நான் நடித்துக் கொண்டே கஷ்டப்பட்டு படித்தேன். அதற்கு பலன் கிடைத்திருக்கிறது. இதற்காக என் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து படிக்க முடிவு செய்து இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

கடவுளின் ஆசியால் வெற்றி:

மேலும் பேஸ்புக் பக்கத்தில், "கடவுளின் ஆசியாலும், கடின உழைப்பாலும் நான் தேர்ச்சி அடைந்துள்ளேன். இந்த நேரத்தில் எனது ஆசிரியர் மற்றும் குடும்பத்தினருக்கும் நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

புரளிதானாம்ப்பா:

புரளிதானாம்ப்பா:

ஏற்கனவே தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானபோது, லட்சுமி மேனன் தேர்வில் தோல்வியடைந்துவிட்டதாக ஒரு செய்தி வெளியாகி, பின்னர் அதனை அவர் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Our very own Lakshmi Menon, who has received laurels for her performances in films like Komban, Kumki and so on, has another addition to her list now. she has stepped out of the school zone successfully. Lakshmi Menon has passed her 12th board exams

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil