Don't Miss!
- News
விசிலடிக்கும் குக்கர்.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுகவுக்கு 2 கட்சிகள் ஆதரவு! யாரு பாருங்க!
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
எதுக்கோ ட்ரை பண்றாரு போல லக்ஷ்மி மேனன்.. வைரலாகும் மெட்ரோ ரயில் குத்தாட்ட வீடியோ!
சென்னை: நடிகை லக்ஷ்மி மேனன் மெட்ரோ ரயிலில் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சுந்தரபாண்டியன், கும்கி, பாண்டியநாடு என ஏகப்பட்ட ஹிட் படங்களில் நடித்தவர் லக்ஷ்மி மேனன்.
சத்தமா பேசுனா பிடிக்காதுனு சொன்ன அக்ஷராவின் முகத்திரையும் கிழிந்து விட்டது.. வலையில் விழுந்த வருண்!
சமீப காலமாக பெரிய பட வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வரும் அவர் அவ்வப்போது நடனமாடும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

15 வயதிலேயே
பள்ளியில் படித்துக் கொண்டிருந்த 15 வயது லக்ஷ்மி மேனன் 2011ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ரகுவின்டே சொந்தம் ரசியா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து ஐடியல் கப்புள் படத்தில் நடித்த அவர் 2012ம் ஆண்டு தமிழில் சுந்தரபாண்டியன் மற்றும் கும்கி படங்களின் மூலம் அறிமுகமாகி கோலிவுட் ஹீரோயினாக மாறினார்.

சூப்பர் ஹிட்
நடிகை லக்ஷ்மி மேனன் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன், கும்கி, பாண்டியநாடு, மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன் உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன. தல அஜித்தின் வேதாளம் படத்தில் தங்கையாக நடித்து கலக்கி இருப்பார் லக்ஷ்மி மேனன். ஆனால், அதன் பிறகு சினிமாவில் சரிவை சந்திக்க ஆரம்பித்தார் லக்ஷ்மி மேனன்.

ஓடவில்லை
வேதாளம் படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்த லக்ஷ்மி மேனனுக்கு அதன் பிறகு முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு பெரிதாக குறைந்தது. வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். ஜெயம் ரவியின் மிருதன், விஜய்சேதுபதியின் றெக்க உள்ளிட்ட படங்கள் சொதப்பவே அதன் பிறகு சினிமாவில் நடிப்பதில் இருந்து சற்றே விலகி இருந்தார்.

மீண்டும் சினிமாவில்
2016க்கு பிறகு சுமார் 4 ஆண்டுகள் லக்ஷ்மி மேனன் நடிப்பில் எந்தவொரு படமும் வெளியாகவில்லை. இந்த ஆண்டு மீண்டும் கும்கி ஜோடியான விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான புலிக்குத்தி பாண்டி படத்தில் நடித்திருந்தார். அந்த படம் நேரடியாக சன் டிவியில் வெளியானது. ஆனால், ஹிட் கொடுக்கவில்லை.
Recommended Video

நடனப்பிரியர்
8ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது லக்ஷ்மி மேனன் பரத நாட்டியத்தை பார்த்து விட்டுத் தான் மலையாளத்தில் அவருக்கு பட வாய்ப்பே கிடைத்தது. லக்ஷ்மி மேனனின் அம்மா உஷா மேனன் ஒரு நடன ஆசிரியர் என்பதால் சிறு வயது முதலே லக்ஷ்மி மேனன் நடனம் ஆடுவதில் மிகவும் ஆர்வமுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மெட்ரோ ரயிலில் குத்தாட்டம்
புலிக்குத்தி பாண்டி படத்திற்கு பிறகு தமிழில் ஒரு படத்திலும் மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார் லக்ஷ்மி மேனன். இந்நிலையில், மெட்ரோ ரயிலில் கிழிந்த ஜீன்ஸ் அணிந்து கொண்டு லக்ஷ்மி மேனன் Me Too பாடலுக்கு போட்ட குத்தாட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து நடன வீடியோக்களை பதிவிட்டு வரும் லக்ஷ்மி மேனன் டான்ஸ் சம்பந்தமாக ஏதாவது ட்ரை பண்ண போகிறாரா? என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பிக் பாஸ் சர்ச்சை
கடந்த சீசனில் லக்ஷ்மி மேனன் பிக் பாஸ் போட்டியாளராக கலந்து கொள்ளப் போகிறார் என்கிற வதந்திகள் வெளியான போது மத்தவங்க யூஸ் பண்ண டாய்லெட்டை எல்லாம் என்னால் க்ளீன் பண்ண முடியாது என லக்ஷ்மி மேனன் போட்ட கமெண்ட் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.