»   »  என் படத்தில் லட்சுமி மேனன் பேயாட்டம் போடவில்லை: இயக்குனர் ராஜன்

என் படத்தில் லட்சுமி மேனன் பேயாட்டம் போடவில்லை: இயக்குனர் ராஜன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: என் படத்தில் லட்சுமி மேனன் பேயாக நடிக்கவில்லை என்று இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜன் தெரிவித்துள்ளார்.

கோலிவுட் ரசிகர்களுக்கு அண்மை காலமாக பேய் படங்கள் தான் பிடித்துள்ளது. அதனால் இயக்குனர்களும் தங்கள் சக்திக்கு ஏற்ப பல வகையான பேய் படங்களை எடுத்து வெளியிடுகிறார்கள். ரசிகர்களும் எத்தனை பேய் படம் வந்தாலும் நாங்கள் எல்லாம் அசரமாட்டோம்ல என்று தியேட்டர்களில் படத்தை பார்த்து ஹிட்டாக்கி வருகிறார்கள்.

பேய் படங்களுக்கு இருக்கும் வரவேற்பை பார்த்து நடிகர், நடிகைகள் பேயாட்டம் போட ஆசைப்படுகிறார்கள்.

நடிகைகள்

நடிகைகள்

பேய் படங்களில் பெண் பேயை தான் சக்தி வாய்ந்ததாக காண்பிக்கிறார்கள். அதனால் ஹீரோயினுக்கு தான் முக்கியத்துவம் அதிகம் உள்ளது. இந்த காரணத்தினால் நடிகைகள் பேய் படங்களில் நடிக்க ஏங்குகிறார்கள்.

அழகுப் பேய்கள்

அழகுப் பேய்கள்

நயன்தாரா, த்ரிஷா, டாப்ஸி, ஹன்சிகா என்று முன்னணி நடிகைகள் பலரும் அழகிய பேயாக நடித்துள்ளனர். பேயாக நடித்து ரசிகர்களை மிரட்ட வாய்ப்பு கிடைக்காதா என்ற ஏக்கத்தில் சில நடிகைகள் உள்ளனர்.

லட்சுமி மேனன்

லட்சுமி மேனன்

கிராமத்து கதாபாத்திரங்கள், குடும்பப்பாங்கான கதாபாத்திரங்கள் என்றால் இயக்குனர்கள் நினைவுக்கு வருவது லட்சுமி மேனனைத் தான். இந்நிலையில் அவரும் ஜெயம் ரவி படத்தில் பேயாக வந்து மிரட்டப் போகிறார் என்று செய்தி வெளியானது.

இல்லை

இல்லை

ஜெயம் ரவி, லட்சுமி மேனனை வைத்து சக்தி சவுந்தர் ராஜன் படம் ஒன்றை எடுத்து வருகிறார். தனது படம் திகில் படம் இல்லை என்றும், லட்சுமி பேயாக நடிக்கவில்லை என்றும் ராஜன் தெரிவித்துள்ளார்.

வித்தியாசம்

வித்தியாசம்

என் படத்தில் லட்சுமி மேனன் வித்தியாசமான கதாபாத்திரத்தில் வருகிறார். ஆனால் அவர் எத்தகைய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற விவரத்தை தற்போது தெரிவிக்க முடியாது என்கிறார் ராஜன்.

English summary
Director Shakti Soundar Rajan has clarified that actress Lakshmi Menon won't be essaying the role of a ghost in hisupcoming yet-untitled Tamil directorial, which also stars Jayam Ravi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil