»   »  வரேன்னு சொல்லு வெயிட்டை குறைச்சிட்டு பழையபடி வரேன்னு சொல்லு: லட்சுமி மேனன்

வரேன்னு சொல்லு வெயிட்டை குறைச்சிட்டு பழையபடி வரேன்னு சொல்லு: லட்சுமி மேனன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பட வாய்ப்புகளுக்கு தனது உடல் எடை ஒரு தடையாக இருப்பதால் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் நடிகை லட்சுமி மேனன்.

கேரளாவில் இருந்து கோலிவுட் வந்தவர் லட்சுமி மேனன். கும்கி மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்த அவரை தமிழ் ரசிகர்கள் சிவப்புக் கம்பளம் விரித்து ஏற்றுக் கொண்டார்கள்.

Lakshmi Menon on weight loss mode

குடும்பப் பாங்கான படங்களில் நடித்து வந்த லட்சுமி மேனனை ரசிகர்கள் தங்கள் வீட்டு பெண்ணாகவே பார்த்தனர். இந்நிலையில் லட்சுமிக்கு எடை ஓவராக அதிகரித்துவிட்டது.

றெக்க படத்தில் குண்டாக இருந்த லட்சுமியை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கலாய்த்தனர். எடை அதிகரிப்பால் அவரை தங்களின் படங்களில் நடிக்க வைக்க இயக்குனர்கள் தயங்குகிறார்கள். இதனால் அம்மணியின் கையில் புதுப் படங்கள் இல்லை.

இதே நிலை தொடர்ந்தால் சினிமாவில் ஓரங்கட்டப்படுவோம் என்பதை உணர்ந்த லட்சுமி உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பதுடன் ஜிம்முக்கு சென்று மாங்கு மாங்குன்னு ஒர்க் அவுட் செய்கிறாராம்.

வரேன்னு சொல்லு உடல் எடையை குறைச்சிட்டு பழையபடி வரேன்னு சொல்லு என்கிறாராம் லட்சுமி.

English summary
Lakshmi Menon is keen in shedding few kilos to get back into shape.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil