»   »  அஜீத்தின் ‘அன்புத் தங்கை’ ஆகிறார் ‘கொம்பன்’ லட்சுமி?

அஜீத்தின் ‘அன்புத் தங்கை’ ஆகிறார் ‘கொம்பன்’ லட்சுமி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத்தின் புதிய படத்தில் லட்சுமிமேனன் அவருக்கு தங்கையாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

என்னை அறிந்தால் பட வெற்றிக்குப் பின்னர் அஜீத், சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார். சமீபத்தில் இப்படத்தின் பூஜை போடப்பட்டது.

இந்தப் படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இசை அனிருத்.

மீண்டும் பாசமலர்...

மீண்டும் பாசமலர்...

அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, அஜீத்துக்கு தங்கையாக நடிக்கும் நடிகையை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

தங்கை வேடமா...

தங்கை வேடமா...

ஒரு படத்தில் ஒரு காட்சியிலாவது அஜீத்துடன் நடிக்க வேண்டும் என்பது தான் பெரும்பாலான தமிழ் நடிகைகளின் விருப்பம். இதனை அவர்களே தங்களது பேட்டிகளில் தெரிவித்துள்ளனர். ஆனால், அஜீத்தின் தங்கை கதாபாத்திரம் என்றதும் பல நடிகைகள் ஜகா வாங்கி விட்டதாகத் தெரிகிறது.

ஓகே சொன்ன லட்சுமி மேனன்...?

ஓகே சொன்ன லட்சுமி மேனன்...?

முன்னதாக அஜீத்தின் தங்கை வேடத்தில் நடிக்க நித்யாமேனன், ஸ்ரீதிவ்யா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக செய்தி வெளியானது. ஆனால், இருவரும் கையை விரித்து விட்டார்களாம். இதனால் படக்குழு லட்சுமிமேனனை அணுகியதாகக் கூறப்படுகிறது.

முதல்முறையாக தங்கை வேடம்...

முதல்முறையாக தங்கை வேடம்...

இதுவரை ஹீரோக்களுக்கு ஜோடியாக மட்டுமே நடித்துவந்த லட்சுமிமேனன், அஜித்துக்காக இந்த படத்தில் தங்கை வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை.

வெற்றிப்பட நாயகி...

வெற்றிப்பட நாயகி...

கும்கி, சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, ஜிகிர்தண்டா என லட்சுமிமேனன் நடித்து வெளிவந்த எல்லா படங்களும் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக வெளிவந்த ‘கொம்பன்' படமும் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடிக் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Lakshmi Menon will be seen playing Tamil superstar Ajith Kumar's sister in the actor's yet-untitled 56th film, which is expected to go on floors soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil