»   »  காதலைக் காபியில் கலக்கும் 'பில்டர் காபி'.. பாட்டுப் பாடிய லட்சுமி மேனன்!

காதலைக் காபியில் கலக்கும் 'பில்டர் காபி'.. பாட்டுப் பாடிய லட்சுமி மேனன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பில்டர் காபி படத்திற்காக நடிகை லட்சுமி மேனன் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக உள்ளார் நடிகை லட்சுமி மேனன். இவர் தற்போது பெயரிடப்படாத படத்தில் அஜீத் தங்கையாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், பில்டர் காபி என்ற படத்தில் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார் லட்சுமி மேனன்.

குக்குரு... குக்குரு..

குக்குரு... குக்குரு..

ஏற்கனவே, ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' என்ற படத்தில் ‘குக்குரு குக்குரு' என்ற பாடலை லட்சுமி மேனன் பாடினார். இப்பாடல் பட்டி, தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.

பில்டர் காபி...

பில்டர் காபி...

அதனைத் தொடர்ந்து நடிப்பு மற்றும் படிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கியதால் பாடல் பாடுவதற்கு இடைவெளி விட்டார் லட்சுமி மேனன். இந்நிலையில், தற்போது மீண்டும் பில்டர் காபி என்ற படத்தில் பாடலொன்றை அவர் பாடியுள்ளார்.

காபி பெண்ணே...

காபி பெண்ணே...

இப்படத்தை அறிமுக இயக்குநர் ராகவ் இயக்குகிறார். இசை ராமசுப்பிரமணியம். இந்த பாடலின் முதல் வரி ‘காபி பெண்ணே' என்று தொடங்குகிறது.

காபியின் வகைகள்...

காபியின் வகைகள்...

இந்த பாடல் வரிகளை சேஷா என்பவர் எழுதியுள்ளார். இப்படத்தின் பிற வரிகள் காபியின் பல வகைகளை குறிப்பிடுவதாக அமைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சைக்கோ திரில்லர்...

சைக்கோ திரில்லர்...

சைக்கோ திரில்லராக உருவாகும் இப்படத்தில் ஆடாம ஜெயிச்சோமடா படப்புகழ் நரேன் பாலாஜி மற்றும் அன்சாரி, சங்கீதா உள்ளிட்ட புதுமுகங்கள் நடித்துள்ளனர். படத்தின் ஆரம்பத்தில் படத்தலைப்பிற்கு ஏற்றவாறு காபியின் வகைகளை கூறும் புரோமோ பாடலை வைக்க இயக்குநர் திட்டமிட்டுள்ளார்.

லட்சுமிமேனன்...

லட்சுமிமேனன்...

எனவே, இப்பாடலை ஒரு நடிகை பாடினால் நன்றாக இருக்கும் என நினைத்து லட்சுமி மேனனை அணுகியுள்ளனர். அவரும் படக் காட்சிகளைப் பார்த்து விட்டு பாடச் சம்மதம் தெரிவித்து விட்டாராம்.

காபி வித் காதல்...

காபி வித் காதல்...

இந்தப்பாடல் கொச்சியில் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு பெண் தனது காதலை காபியோடு கலந்து கூறுவது தான் இப்பாடலின் முக்கிய அம்சமாம்.

English summary
Actress Lakshmi Menon established her singing credentials with Kukuru in Oru Oorla Rendu Raja and now, she has lent her voice for a new song in an upcoming film titled Filter Coffee.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil