»   »  சினிமாவில் பிஸி... காலேஜுக்கு முழுக்குப் போட்டுட்டாராமே லட்சுமி மேனன்!

சினிமாவில் பிஸி... காலேஜுக்கு முழுக்குப் போட்டுட்டாராமே லட்சுமி மேனன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கைநிறைய படங்கள் இருப்பதால் லட்சுமி மேனன் கல்லூரிக்கு முழுக்குப் போட்டு விட்டதாக கூறப்படுகிறது.

தமிழின் வளர்ந்து வரும் இளம் கதாநாயகிகளில் ஒருவர் லட்சுமி மேனன்.

அறிமுகமானது கும்கியில் என்றாலும் லட்சுமி மேனனை தமிழுக்கு அறிமுகப்படுத்தியதில் சுந்தரபாண்டியன் முந்திக்கொண்டு விட்டது.

கும்கி

கும்கி

கும்கியில் அறிமுகமான லட்சுமி மேனன் சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் புகழ் பெற்றார். தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா, கொம்பன், பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை போன்ற படங்கள் ஹிட்டடிக்க தமிழ் சினிமாவின் முன்னணி நாயகிகளில் ஒருவராக மாறினார்.

வேதாளம்

வேதாளம்

ஹீரோயினாக நடித்து வந்த லட்சுமி மேனன் வேதாளம் படத்தில் அஜீத்தின் தங்கையாக நடித்திருந்தார். இப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதுகுறித்து அவர் இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பிருந்ததால் ஒத்துக் கொண்டேன் இனிமேல் தங்கையாக நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.

கல்லூரி

கல்லூரி

பிளஸ் டூவை முடித்த லட்சுமி கடந்த வருடம் கேரளாவின் கொச்சியில் உள்ள பிரபல தூய நெஞ்சக் கல்லூரி (சேக்ரட் ஹார்ட் காலேஜ்)யில் தகவல் தொடர்பு ஆங்கிலம் சேர்ந்தார். இந்நிலையில் லட்சுமி மேனன் கல்லூரிக்கு முழுக்குப் போட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொலை தொடர்பு

தொலை தொடர்பு

ஆனால் லட்சுமி மேனன் கல்லூரியை விட்டு விலகவில்லை என்று அவரது தாயார் கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் ''படங்கள் அதிகமாக இருப்பதால் தொலை தூரக் கல்வி முறைக்கு மாறியிருக்கிறார். மற்றபடி படிப்பை நிறுத்தவில்லை'' என தெரிவித்திருக்கிறார்.

தற்போது றெக்க, சிப்பாய் போன்ற படங்களில் லட்சுமி மேனன் நடித்து வருகிறார்.

English summary
Lakshmi Menon now Joined Distance Education.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil