»   »  சொந்தக் குரலில் லஷ்மி ராய்

சொந்தக் குரலில் லஷ்மி ராய்

Subscribe to Oneindia Tamil
Lakshmi Roy

கன்னட அழகியான லஷ்மிராய், இனிமேல் தான் நடிக்கும் தமிழ்ப் படங்கள் அனைத்திலும் சொந்தக் குரலிலேயே பேசி நடிக்கப் போகிறாராம்.

பெல்காம் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட லஷ்மி ராய் அங்கிருந்து நேராக தமிழுக்கு நடிக்க வந்தார். கற்க கசடற படத்தில் நடித்து அறிமுகமான லஷ்மி ராய், அதன் பின்னர் சில படங்களில் நடித்தும் கூட இன்னும் ஸ்டார் நடிகை என்ற லெவலுக்கு முன்னேற முடியாமல் உள்ளார்.

இந்த நிலையில் தற்போது நடித்து வரும் தாம் தூம் படத்தை வெகுவாக எதிர்பார்த்துள்ளார் லஷ்மி ராய். காரணம், படத்தின் கதை அப்படியாம்.

தமிழ் தாய் மொழியாக இல்லாவிட்டாலும் கூட தமிழ் நன்றாகத் தெரியும் லஷ்மிக்கு. எனவே தாம் தூம் படத்தில் தனது சொந்தக் குரலிலேயே பேசப் போகிறார் லஷ்மி ராய்.

இதுதான் அவர் தமிழில் சொந்தக் குரலில் பேசப் போகும் முதல் படம். படத்தின் கதைப்படி, ரஷ்யாவில் செட்டிலான தமிழ்ப் பெண் கேரக்டரில் நடிக்கிறார் லஷ்மி ராய். சென்னையிலிருந்து ரஷ்யா வருகிறார் டூரிஸ்ட் கைடான ஜெயம் ரவி.

வருகிற இடத்தில் ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். அதிலிருந்து ஜெயம் ரவி மீள உதவுகிறார் லஷ்மி ராய். அதைத் தொடர்ந்து வழக்கம் போல காதல் மலருகிறது. ஆனால் இது ஒரு தலைக் காதலாம்.

மறைந்த ஜீவாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள தாம் தூம், பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து இனிமேல் நடிக்கும் அனைத்துத் தமிழ்ப் படங்களிலும் லஷ்மி ராய் சொந்தக் குரலிலேயே பேசி நடிக்கப் போகிறாராம்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil