»   »  ஜாகையை மாற்றிய லட்சுமி ராய்!

ஜாகையை மாற்றிய லட்சுமி ராய்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Lakshmi Roy
பெல்காம் அழகி லட்சுமி ராய் தனது இருப்பிடத்தை மாற்றி விட்டாராம். அவர் இருப்பிடத்தை மாற்றுவது இது மூன்றாவது முறையாகும்.

கர்நாடகத்திலிருந்து தமிழுக்கு வந்த தித்திப்புத் தேவதைகளில் பெல்காம் அழகி லட்சுமி ராயும் ஒருவர். கற்க கசடற மூலம் நடிக்க வந்த லட்சுமி ராய், திரையுலகை கசடற கற்றாரோ, இல்லையோ நட்பின் இலக்கணத்தை கலக்கலாக கற்று வைத்துள்ளார்.

அம்மணிக்கு பட வாய்ப்புகளை விட நண்பர்கள்தான் அதிகம். கைக்கு அடங்காத வகையில் ஏகப்பட்ட நட்புகள். எல்லோருமே ஆண்கள் என்பதுதான் இதில் விசேஷமே.

சென்னைக்கு நடிப்பதற்காக வந்தது முதல் அவர் ஒரு நட்சத்திர ஹோட்டலில்தான் தங்கியிருந்தார். தன்னைத் தேடி வரும் நண்பர்களின் கூட்டம் அதிகமானதால் புதிதாக ஒரு பிளாட்டை வாடகைக்கு எடுத்து அங்கு ஜாகை மாறினார்.

வந்த இடம் வசதியாக இருந்ததால், அங்கேயே டேரா போட்டு விட முடிவு செய்தார். ஆனால் அதே அபார்ட்மென்ட் வளாகத்தில் குடியிருப்போருக்கு லட்சுமி ராயும், அவரது நண்பர்களும் புழங்கிய விதம் பிடிக்காமல் போய் விட்டது. முனுமுனுக்க ஆரம்பித்து விட்டனர்.

மேலும் லட்சுமி ராய் தங்கியிருந்த பிளாட்டின் உரிமையாளருக்கும் ஏதோ பயம் வந்து விட்டது. இனியும் விட்டால் சிக்கலாகி விடும் என்று பயந்த அவர் காலி செய்யும்படி கூறி விட்டார்.

இதனால் சமீபத்தில் தனது பிளாட் வீட்டைக் காலி செய்து விட்டாராம் லட்சுமி. மறுபடியும் பழைய ஹோட்டலுக்கே ஜாகையை மாற்றி விட்டாராம்.

என்னதான் இருந்தாலும் பழசு மாதிரி இல்லை என்று ஹோட்டலைப் பாராட்டிக் கொண்டிருக்கிறாராம். ஹோட்டல் நிர்வாகத்தினரும், லட்சுமியின் மறு வருகையை சிறப்பாக கொண்டாடி வரவேற்றுள்ளனராம்.

பேஷ், பேஷ்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil