»   »  நாயகியாகிறார் 'தாம் தூம்' லட்சுமி ராயின் தங்கச்சி!

நாயகியாகிறார் 'தாம் தூம்' லட்சுமி ராயின் தங்கச்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Ashwini Rai
பெரிய அளவில் சினிமா வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் கூட ஏதாவது ஒரு வகையில் லைம் லைட்டிலேயே இருந்து வரும் லட்சுமி ராய் தனது வீட்டிலிருந்து இன்னொரு அழகியை சினிமாவுக்கு கூட்டி வருகிறார். அது, லட்சுமி ராயின் தங்கச்சி அஸ்வினி ராய்.

கற்க கசடற படம் மூலம் கவர்ச்சிகரமான நாயகியாக தமிழ் சினிமாவுக்கு வந்தவர் பெல்காம் தந்த பேரழகியான லட்சுமி ராய். அதன் பின்னர் ஏராளமான படங்களில் நடித்து விட்டார். தவிர்க்க முடியாத நடிகை என்ற பெயரைப் பெறாவிட்டாலும் கூட ஏதாவது ஒரு வகையில் பிசியாகவே இருக்கிறார் லட்சுமி ராய்.

ஏகப்பட்ட வம்புகள், வதந்திகளில் சிக்கியவர். டோணியுடன் ரொம்பவே கிசுகிசுக்கப்பட்டவர். கல்யாணம் வரை கூட இந்த வதந்திகள் பரவின. ஆனாலும் டோணி கடைசியில் ஜகா வாங்கி சாக்ஷியுடன் செட்டிலாகி விட்டார்.

இந்த நிலையில், தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என தலா ஒரு படத்தில் நடித்து வருகிறாராம் லட்சுமி ராய். விரைவில் இவையெல்லாம் வரிசையாக வரப் போகிறதாம்.

இந்தப் பின்னணியில் தனது தங்கை அஸ்வினி ராயை நடிகையாக்கப் போகிறாராம் லட்சுமி. இதற்காக சிறப்பு முயற்சிகளில் இறங்கியுள்ளாராம். இதற்கு வசதியாக எங்கே போனாலும் தனது தங்கச்சியையும் கூடவே கூட்டிக் கொண்டு போகிறாராம். சமீ்பத்தில்தான் டெல்லியில் நடந்த ரீமா சென் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குக் கூட அஸ்வினி சகிதம்தான் போனார். மெகந்தி நிகழ்ச்சியிலும் தங்கையுடன் கலந்து கொண்டார்.

தயாரிப்பாளர்களிடமும் கூட்டிச் சென்று தங்கையைக் காட்டி சான்ஸ் கேட்கிறாராம். சிலரிடம் கதைகளைக் கூட கேட்க ஆரம்பித்து விட்டாராம்.

லட்சுமி ராய் போகிற போக்கைப் பார்த்தால் சீக்கிரமே அஸ்வினிக்கு அரங்கேற்றம் ஆகி விடும் என்று கூறுகிறார்கள்.

English summary
Lakshmi Rai's younger sister Ashwini Rai is all set to enter into films soon. Lakshmi is vigorously trying to make her sister as a heroine in films.
Please Wait while comments are loading...