»   »  டோணி பட இயக்குனர் மீது கோபத்தில் இருக்கும் லட்சுமிராய்

டோணி பட இயக்குனர் மீது கோபத்தில் இருக்கும் லட்சுமிராய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் லாரன்ஸ் நடிக்கும் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் ஐட்டம் பாடலுக்கு ஆடும் நிலைமைக்கு வந்துவிட்டார் லட்சுமிராய். இதனாலேயே பொது நிகழ்ச்சிகளுக்கு படு கவர்ச்சியான உடை அணிந்து வந்து கவனம் ஈர்க்க முயற்சிக்கிறார்.

லட்சுமிராய் ஒரு காலத்தில் கிரிக்கெட் கேப்டன் டோணிக்கு நெருக்கமானவராக வலம் வந்தார். டோணி சென்னைக்கு வந்தால் பைக்கில் லட்சுமிராயை ஏற்றிக்கொண்டு சுற்றுவதை வழக்கமாக வைத்திருந்தார். திருமணம் வரை போகும் என்ற எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து பாதியிலேயே பிரிந்தது இந்த ஜோடி.

Lakshmi Rai upset after watched Dhoni movie

நீரஜ் பாண்டே இயக்கத்தில் டோணியின் வாழ்க்கை வரலாற்று படம் இந்தியா முழுக்க வெளியாகி ஹிட் அடித்துள்ளது. இதில் லட்சுமி ராய் போலவே ஒரு தோழி டோணிக்கு இருப்பார். டோணியை திருமணத்துக்கு வற்புறுத்துவார். டோணி சம்மதம் தெரிவிக்க வரும் சூழலில் ஒரு விபத்தில் இறந்துவிடுவார். இந்த கேரக்டர் லட்சுமி ராயை வைத்து உருவாக்கப்பட்டது என்று சந்தேகம் எல்லோருக்கும் வந்தது. இதுகுறித்து லட்சுமிராய் பேச மறுத்துவிட்டார்.

ஆனால் தன் கேரக்டரை பாதியில் சாகடித்ததால் இயக்குனர் மீது வருத்த்த்தில் இருப்பதாக சொல்கிறார்கள். டோணிக்கு லட்சுமி ராய் போல நிறைய தோழிகள் உண்டு. அந்த கேரக்டர் பல பேருக்கு பொருந்துமே என்றும் சிலர் சிரிக்கிறார்கள்.

அப்போ விட்டுட்டு இப்போ வருத்தப்பட்டா எப்படி லட்சுமி?

பின்குறிப்பு - லட்சுமி ராய் தனது பெயரை ராய் லட்சுமி என்று மாற்றிவிட்டார். குழப்பத்தைத் தவிர்க்கவே லட்சுமிராய் எனக் குறிப்பிட்டுள்ளோம்.

English summary
Lakshmi Rai is very much upset over MS Dhoni: An Untold Story

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil