»   »  ரஷியாவில் லஷ்மி ரவுசு!

ரஷியாவில் லஷ்மி ரவுசு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தாம் தூம் பட யூனிட் ரஷியாவுக்கு இடம் பெயர்ந்துள்ளது. அங்கு ஜெயம் ரவியும், லஷ்மி ராயும் பங்கேற்ற அட்டகாசமான ஆட்டத்தை படமாக்கவுள்ளனராம்.

ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்க, ஜெயம் ரவி நடிக்கவுள்ள புதிய படம் தாம் தூம். ரஷியாவில்தான் முழுப் படத்தையும் படமாக்கவுள்ளனர். ஹீரோயின் சரிவர செட் ஆகாததால் படப்பிடிப்பு தாமதமாகி வந்தது.

தற்போது படப்பிடிப்பை தொடங்கவுள்ளனராம். ஜெயம் ரவியும், லஷ்மி ராயும் பங்கேற்கும் பாடலோடு படத்தைத் தொடங்குகின்றனர். இதற்காக ஜெயம் ரவி, லஷ்மி ராய், ஜீவா உள்ளிட்ட படப்பிடிப்புக் குழுவினர் மாஸ்கோ பறந்துள்ளனராம்.

லஷ்மி ராய்க்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிடைத்துள்ள படம் என்பதால் பின்னி எடுத்து வாய்ப்புகளை அள்ளிக் குவிக்க ஆயத்தமாக உள்ளாராம்.

அவர் தற்போது நடித்து வரும் கன்னடப் படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டதால் தாம் தூம் படத்துக்கு கால்ஷீட் கொடுத்து விட்டார். இடையில் கன்னட பிரசாத்துடன் இணைத்து கிசுகிசு எழுந்ததால் ஆடிப் போய் விட்டார் லஷ்மி ராய்.

இப்போது எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டேபாது, அய்யோ, அந்த செய்தி வந்தபோது நான் உடைந்து போய் விட்டேன். சரியாக சாப்பிடக் கூட முடியவில்லை. என்னைப் பற்றி பெற்றோர், உற்றார், உறவினர், நண்பர்களுக்கு நன்கு தெரியும் என்பதால் அனைவரும் எனக்கு ஆறுதல் கூறி தேற்றினர்.

அப்புறம்தான் என்னால் தேற முடிந்தது. இப்போது ஐ ஆம் ஆல்ரைட். தாம் தூம் படத்தின் மூலம் மறுபடியும் தமிழில் ஒரு ரவுண்டு வர ஆர்வமாக உள்ளேன் என்கிறார் உற்சாகத்தோடு.

அதே உற்சாகத்தோடு தாம் தூம் என துள்ளுங்க, பார்த்து எத்தனை நாளாச்சு!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil