»   »  மலையாளத்தில் லட்சுமிராய்

மலையாளத்தில் லட்சுமிராய்

Subscribe to Oneindia Tamil

கலக்கல் லட்சுமிராய் இப்போது மலையாளத்திற்கு செல்கிறார்.

கற்க கசடற, தர்மபுரி ஆகிய படங்களில் புகுந்து விளையாடிய லட்சுமிராய், ஒரு புதுமுக ஹீரோவுக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்து சூடேற்றினார்.

இதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டனம் பெருகவே இனிமேல் உணர்ச்சி வசமான முத்தக் காட்சியில் நடிக்கவே மாட்டேன் என உறுதிமொழி தந்திருக்கிறார்.

இதுவரை தமிழ், தெலுங்கு, தாய் மொழியான கன்னடம் என சுற்றிச் சுற்றி வந்த லட்சுமிராய்க்கு தற்போது மலையாள படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்கு முன் மோகன்லாலுடன் நடிக்க வந்த வாய்ப்பை லட்சுமி ராய் சில தவிர்காக முடியாத காரணத்தால் மறுத்தார்.

அதன் பின்னர் தற்போது மீண்டும் மலையாளத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. ஹரிஹரன் இயக்கத்தில் மம்முட்டி நடிக்கும் பழசிராஜாவில் லட்சுமிராயை நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது.

கடந்த முறை தவற விட்ட வாய்ப்பை இந்த முறை கண்டிப்பாக தவற விட மாட்டார் என தெரிகிறது.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil